ISBN (ஐஎஸ்பிஎன்) என்கிற எழுத்துக்களையும் அதற்கான எண்களையும் பல மேல்நாட்டுப் புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள். INTERNATIONAL STANDARD BOOK NUMBER (சர்வதேச நிலையான புத்தக எண்) உலகில் உள்ள அத்தனை புத்தகங்களையும் பட்டியலிடவும், கணிப்பொறியாக்கம் செய்யவும் ஏற்பட்ட எண் இது.
அது போல யுபிஸி என்று ஒன்று உண்டு. யுனிவர்ஸல் ப்ராடக்ட் கோட். இதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான சரக்குப் பொருட்களின் மேல் பார்த்திருப்பீர்கள். பட்டை பட்டையாக கறுப்பு வெள்ளைக் கோடுகள். இது பதினோரு இலக்க எண்ணிக்கை. கறுப்புக்கோடு 0, வெள்ளைக்கோடு 1 என்று சம்பிரதாயம். இரண்டு அல்லது மூன்று பூஜ்ஜியம் சேர்ந்தால் பட்டை தடித்ததாகும். முதல் இலக்கம் பொருளின் வகை, அடுத்த ஐந்து இலக்கங்கள் தயாரிப்பாளர் யார், அடுத்த ஐந்து நிறம், எடை, அளவு போன்ற விவரங்கள். இதில் இல்லாதது ஒன்றே ஒன்று விலை!

இப்போது எல்லா சூப்பர்மார்கட்டுகளிலும் இந்தப் பட்டைக் கோட்டை ஓர் ஒளிப்பேனாவால் வருடினால் போதும். கணிணி அதைப்படித்து என்ன பொருள், என்ன விலை என்று கண்டுபிடித்து பில் போட்டுவிடும்.
டைவர்ஸ்
உன்னை அவனும்
அவனை நீயும்
முழுமையாக
புரிந்து கொண்டபோது!