24 December 2012

இனி நான் யாரைப் பாடுவேன்...? (எம்.ஜி.ஆர். நினைவு நாளுக்காக...)


பொன்மனச்செம்மலே!
என்
பொழுத்து புலரக்
கூவிய சேவலே!
உனக்கென்று
நான் எழுதிய
முதல் வரியில்தான்
உலகுக்கு
என் -
முகவரி
தெரிய வந்தது!

என் கவிதா விலாசம்..
உன்னால்தான் -
விலாசமுள்ள
கவிதையாயிற்று!

இந்த நாட்டுக்குச்
சோறிடு முன்னரே
என் -
பாட்டுக்குச்
சோறிட்டவன் நீ!

என்னை
வறுமைக் கடல்மீட்டு..
வாழ்க்கைக் கரை சேர்த்த
படகோட்டியே!
கருக்கிருட்டில்
என்
கண்களில் தென்பட்ட
கலங்கரை விளக்கமே!

நான் பாடிய பாடல்களை
நீ பாடிய பிறகுதான்
நாடு பாடியது...
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது!

இல்லையென்று
இரப்போர்க்கு
இல்லையென்று
சொல்லாதவன்...

இன்று -
இல்லையென்று போனான்...
இனி நான் -
யாரைப்பாடுவேன்...?

புரட்சித் தலைவனே!
நீ
இருந்தபோது -
உன் அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...
இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து -
நாடு அழுதது!

வைகை யாறும்
பொன்னி யாறும்
வற்றிப்போகலாம்;
நீ
வற்றாத
வரலாறல்லவா!

கலைத்தாயின்
தலைமகனே!
கோட்டையில்
கொலுவிருந்தால் மட்டும்
நீ
'சி.எம்' அல்ல...
கோடம்பாக்கத்திலும்
கர்ஜித்துக்கொண்டிருந்த
சீயம் தான்!

இன்று
படத்தை நிரப்பப்
பலர் இருக்கிறார்கள்;
உன் இடத்தை நிரப்பத்தான்
எவருமே இல்லை!

நான்
மனிதர்களில் -
நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆனால்,
நடிகர்களில்
நான் பார்த்த
முதல் மனிதன் நீதான்!

அதனால்தான்...
நீ
நோயுற்ற போது -
தங்களது
வாழ்நாட்களின் மிச்சத்தை
உன் கணக்கில்
வரவு வைத்துவிட்டு -
எத்துணையோ பேர்
தங்கள் கணக்கை
முடித்துக்கொண்டு
தீக்குளித்தார்கள்!

என்
இதய தெய்வமே!
உன்
இறப்பில்
நான்
இரண்டாவது முறையாக
என்
தாயை இழந்தேன்!
இனி -
நான் யாரைப் பாடுவேன்...!

எம்.ஜி.ஆர் இறந்த போது கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது.
எம்.ஜி.ஆர் நினைவு நாளுக்காக...

எம்.ஞானசேகரன்.


22 December 2012

வித்தியாசமான புகைப்படங்கள்

சில புகைப்பட நிபுணர்களின் திறமை அசாத்தியமானது. நமக்கு கேமரா கிடைத்தால் ஏதோ ஒன்றை எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் 'க்ளிக்' செய்து விடுகிறோம். ஆனால் இதில் நிபுணத்துவம் பெற்றவர்களோ அருமையான புகைப்படம் எடுப்பதற்காக வினாடி கணக்காக காத்திருக்கிறார்கள். எண்ணம் செயல் எல்லாம் அந்த குறிப்பிட்ட தருணத்திற்காகவே! 

                         இங்கே பாருங்கள் அப்படி எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

17 June 2012

மெட்ரோ ரயில் பிரியங்கா!பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ளமெட்ரோ ரயில் நிலையம்...
வண்ணமயமான சிறகு ஒன்று, காற்றில்மிதந்து வருவது போல மெட்ரோரயில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கடைசியாகடிரைவர் கேபினில் இருந்து விமான பைலட்போல ஒரு பெண் இறங்கினார். அவர் தான்.....

மெட்ரோ ரயிலின்முதல் பெண் டிரைவர். பெயர்பிரியங்கா. வயது: 21.

வீட்டிற்கு போகும் அவசரத்திலும், புன்னகைசிந்தியபடி, தான் மெட்ரோ ரயில்ஓட்டுனரான கதையை கூறினார். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில்டிப்ளமோ முடித்தவர். மின்சார பயன்பாட்டில் அதிகசக்தியுடன் இயங்கும் மெட்ரோ ரயில் ஓட்டுனராகவேண்டும் என்பது இவர் கனவு.
இதற்காக நிறைய படித்து, நிறையஉழைத்து, தன் கனவை நனவாக்கிவிட்டார்.

டில்லி சென்று, அங்குள்ள மெட்ரோரயிலை, ஆறு மாதகாலம் ஓட்டி, பயிற்சி எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பும், சிக்னல்களின் முக்கியத்துவம் குறித்தே நிறைய வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின், பெங்களூரில் ஓடும் மெட்ரோ ரயிலின்முதல் பெண் டிரைவராக நியமனம்பெற்று, ஆயிரம் பயணிகளுடன் மகாத்மாகாந்திரோடு நிலையத்தில் இருந்து, பையனப்பஹள்ளி வரை, ரயிலை ஓட்டியமுதல் அனுபவம் மறக்க முடியாதது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த திரில்லான நேரமதுஎன்கிறார்.


வெற்றிகரமாக இவர் மெட்ரோவை இயக்கிவருவதை அடுத்து, தற்போது மேலும், மூன்றுபெண்கள், மெட்ரோ டிரைவராக நியமனம்பெற்றுள்ளனர்.
வேலை முடிந்ததும், பஸ்சை பிடித்து பெங்களூரில்இருந்து, 30 கி.மீ., தூரத்தில்உள்ள, தன் கனகபுரா கிராமத்திற்குபோய் விடுகிறார்.

விவசாயியின் மகளான இவர், தற்போது, வீட்டிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தாலும், நகரத்திற்கு இடம் பெயரவில்லை, காரணம், இனிமையான கிராம வாழ்க்கை பிடித்துவிட்டது இவருக்கு. மெட்ரோ ரயிலை பிரமாதமாக ஓட்டும்பிரியங்காவிற்கு, இன்னமும் சைக்கிள் ஓட்டத் தெரியாது.

நன்றி; தினமலர்.

12 June 2012

பெண் பிள்ளைகள் முன்னேறுவது எப்படி?

  
  •  தினசரி ஏதாவது செய்தித்தாள் படியுங்கள். பிடித்த விஷயம்,   பிடிக்காதவிஷயம் என அனைத்தையும் படியுங்கள். (விளம்பரங்கள் உட்பட)  

  • சுதந்தரமாக வெளியில் செல்லப் பழகுங்கள். கடை, கோயில், வங்கி, அஞ்சல் அலுவலகம் என…  
  •  ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். தையல், சைக்கிள் ஓட்ட, மொபெட் ஓட்ட, ஓவியம் வரைய…
  • அக்கம் பக்கம் பெண்களுடன் இனிமையாக நட்புணர்வோடு பழகுங்கள்.
  • எதுவாக இருந்தாலும் நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுங்கள்.
  • உங்கள் மனதில் படும் கருத்துக்களை தாராளமாக வெளியே சொல்லப் பழகுங்கள். 
  • சின்னச்சின்ன விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், பனவிடை அனுப்ப, பதிவுத்தபால் அனுப்ப, எலக்ட்ரிகல் ப்யூஸ் போட, பல்ப் மாற்ற, எதற்காவது மனு எழுத, வங்கியில் வரைவோலை எடுக்க…
  • சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், தொலைபேசி அலுவலகம், காவல் துறை, மருத்துவமனை என அனைத்து தொலைபேசி எண்களையும் குறித்து வையுங்கள். 
  • நிறைய விஷயங்கள் தெரியத்தெரிய நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
  • இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று அங்காலாய்பவர்களா நீங்கள்……. நீங்கள் வாழ்ந்துதான் என்ன ஆகப்போகிறது?!

ஆள் மாற்று விளையாட்டு!
 
'பலருக்கு இங்கே காதல் என்பது திருமணச்
சடங்குகளுக்கு முன்னதான பொழுதுபோக்கு!
சிலருக்கு அது திருமணச் சடங்கிற்குப்
பின்னதான ஆள் மாற்று விளையாட்டு!'

- அறிவுமதி.

24 April 2012

கோடைக்கு குளிர்ச்சிவெந்தயத்தைதயிரில் ஊறவைத்து, சர்க்கரை போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுச்சூட்டைத் தணிக்கும்.


வெட்டிவேரைஇரவில் கொதிக்க வைத்து காலையில் வடிகட்டி சூடான சர்க்கரைப் பாகில் கலந்து பன்னீர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

சித்தரத்தைவேரை இரவு தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் வேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் தொண்டைக்கட்டுக்கு நல்லது.


சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கிற சதையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிட்டால் உடலுக்கு ஏகக் குளிர்ச்சி.

  
கொத்துமல்லியுடன் வெல்லம்சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

அகலமானபாத்திரத்தில்நீரைக் கொதிக்கவிட்டு அதில் நன்னாரி வேர் முழுவதும் மூழ்கும்படி 5 நிமிடம் அப்படியே அடுப்பை எரியவிடவும்.

நீரை வடிகட்டி எடுத்து, தேவையான அளவு சர்க்கரைப் பாகை கம்பிப்பதம் வந்தவுடன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். தேவையானபோது நீருடன் 1:4 வீதத்தில் கலந்து கொள்ளவும்.


இஞ்சியைசின்னச்சின்னதாகவெட்டி மிக்ஸியில் அடித்து ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்


எலுமிச்சை சாறு 2 டம்ளர் எடுத்துக்கொண்டு, சர்க்கரை 3 டம்ளர் எடுத்து பாகு காய்ச்சி, ஜூஸ் விட்டுக் கிளறி 5 நிமிடம் கொதித்தபின் பாட்டிலில் பதப்படுத்தலாம். தேவைப்படும் போது 2 தேக்கரண்டியுடன் 1 டம்ளர் நீர் கலந்து பயன்படுத்தலாம்.

அன்பு
உன்உண்மையான அன்பு தெரியாதவர்களிடம்
உன் கோபத்தை காட்டதே,
ஏன் என்றால் அவர்களுக்குதெரியாது,
உன் கோபமும் ஒரு "அன்புதான்" என்று.................

28 February 2012

மற்றவர்களைக் கவருங்கள்நீங்கள் திறமைசாலியாக வேண்டுமா? அப்படியானால் முதலில் மற்றவர்களை கவருகின்ற அளவுக்கு உங்களது பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். எப்படி?

முதலில் தேவை புன்சிரிப்பு. இந்த புன்சிரிப்பே மற்றவர்களை உங்களை நோக்கி இழுக்கும். அகங்காரம் நிறைந்தவர்கள் முகத்திலும், கர்வம் நிறைந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு வராது. முகம் இறுகிக் கிடக்கும். அவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலக்கப்படுவார்கள். சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பவர்களுக்கு எந்தச் சபையிலும் தனி மவுசு இருக்கும்.

ஆரோக்கியம் பெண்களுக்கு மிக அவசியம். ஆரோக்கியமுள்ள பெண் எந்த வயதிலும் அழகாகத் தோன்றுவாள். உங்களிடம் இருக்கும்ப்ளஸ் பாயின்ட்என்ன, ‘மைனஸ் பாயின்ட்என்ன என்பதை அறியுங்கள். அழகிலும், உங்களிடம் இருக்கும் குறையைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் நிறைய மெருகேற்றுங்கள். அதற்கு தேவைப்பட்டால்ப்யூட்டி பார்லர்செல்லலாம்.திறமைசாலிகளுக்கு குண்டான உடல் இருக்கக்கூடாது. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, உணவுமுறைக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை சுத்தமாக வைத்திருப்பது சிறந்தது.

உங்களுடைய உடை நேர்த்தி, உங்கள் குணாதிசியங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வயதுக்கும், சூழ்நிலைக்கும் தக்கபடி பொருத்தமான உடைகளை அணியுங்கள். சிவந்த உடலைக் கொண்டவர்களுக்கு அடர்த்தியான திற உடைகளும், சுமாரான நிறம் கொண்டவர்களுக்கு இள நிற உடைகளும் பொருத்தமாகும்

நல்ல உடைகளை அணியும்போது மனதுக்கு 'தன்' உற்சாகம் பிறக்கும். அறுந்த பட்டன்கள், முறிந்த ஊக்குகள் கொண்ட உடைகளை வெளி உபயோகத்துக்குப் பயன்படுத்தக்கூடாது.

புதியவர்களோடு அறிமுகமாகும்போது வெட்கம், நாணத்தை தேவையில்லாமல் வெளிக்காட்டக் கூடாது. அது பலஹீனத்தின் அறிகுறி. பேசும்போது மற்றவர்களை சலிப்படைய வைத்து விடக்கூடாதுமிதமான குரலில் தெளிவான சிந்தனையில் பேசவேண்டும்.

மேலும் அப்படிப் பேசும்போது, தனது கௌரவத்தை விட்டுவிடல் ஆகாது. அன்பை வெளிப்படுத்த வேண்டும்.கோபத்தைக் குறைக்கப் பழகுங்கள். மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். தன்னிடம் இருக்கும் தவறுகளையும் களையத் தெரிய வேண்டும். எப்போதுமே உங்களை சுய பரிசோதனை செய்யத்தயாராய் இருங்கள்.

எந்த ஒரு செயலையும் அறிவு பூர்வமாக அணுகுங்கள். சின்னப் பிரச்னைகளுக்காக ஆவேசம் கொள்ளாதீர்கள்.

சொல்லிலும், செயலிலும் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்.
உங்களின் விமர்சன புத்தியை ஒதுக்க முன்வாருங்கள். மற்றவர்களிடம் இருக்கும் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, தேவைக்கு ஊக்குவியுங்கள்.

இதெல்லாம் இருந்தால், இருக்கிற துறையில் உங்களால் வேகமாக முன்னேறிவிட முடியும். உங்களிடமும் நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகிவிடும்.

20 February 2012

இன்று சபதம் எடுங்கள்...இப்போ, அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உங்களுக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...

குளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.


இனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலைசேஷன்...

இன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... இந்தியர்களாகிய நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை மேலும் கவலைக்கிடமாகி விடும்.

ஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள்,
ஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... நாம் விழித்துக் கொண்டாலன்றி...நம் ஊரிலேயே தயாராகும் பொருட்களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே நம்மிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

இந்திய பொருளாதாரத்தை  சீரழிக்கும் செயல் இது. கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், நம் தாகம் தீருமா? அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...

மல்டி நேஷனல் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், "கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...

இன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.

வெளிநாட்டு பொருட்கள் எவை, எவை... அவற்றுக்கு ஈடான இந்திய தயாரிப்புகள் எவை எனஉங்களுக்குத் தெரியுமா?
இதோ அது:

வெளிநாட்டு சோப்பு, பாத் ஜெல் போன்றவை: கேமி, பாமொலிவ், லக்ஸ், லைப்பாய், லிசான்சி, ஹமாம், ரெக்சோனா, லிரில், பியர்ஸ், டோவ்...


இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள்: நீம், மார்கோ, சிந்தால் உட்பட கோத்ரெஜ் கம்பெனிகளின் சோப்புகள், சந்தூர், விப்ரோ சிகக்காய், மைசூர் சாண்டல், எவிட்டா, நிர்மா பாத், சந்திரிகா, மெடிமிக்ஸ், கங்கா...

வெளிநாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்: சிபாகா, பெப்சோடன்ட், போர்ஹான்ஸ், குளோசப், கோல்கேட், மென்டாடென்ட்...

நம் தயாரிப்புகள்:வீகோ வஜ்ர தந்தி மற்றும் டாபரின் பற்பசைகள், நீம், பபூல், பிராமிஸ், புரூடென்ட்...

பல் துலக்கும் பிரஷ்கள், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகள்: போர்ஹான்ஸ், பெப்சோடன்ட், கோல்கேட், குளோசப்...

நம்முடையவை: புரூடென்ட், அஜந்தா, பிராமிஸ்...

ஷேவிங் க்ரீம் மற்றும் பிளேடு வெளிநாடு: பாமொலிவ், ஓல்டு ஸ்பைஸ், கில்லட், செவன் - ஒ - கிளாக், 365.

நம்முடையவை: கோத்ரெஜ், இமானி, சூப்பர் மேக்ஸ், டோபாஸ், லாசர், அசோகா...

வெளிநாட்டு முக பவுடர்:பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், ஷவர் டு ஷவர்...

நமது: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிளஸ்.
வெளிநாட்டு ஷாம்பு: ஹென்கோ, ஆல்கிளியர், நைசில், சன்சில்க்...
நம்மவை: லாக்மே, நிர்மா, வெல்வெட்...

— நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா?