11 October 2011

பயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி - வேறுபாடு அறியுங்கள்!


நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்கையில், நம்மைக் குறித்த விபரங்களை, ஒரு சிறிய ஆவணம் மூலமாக தெரிவிக்கிறோம். அந்த ஆவணத்திற்கு ரெஸ்யூம், பயோடேட்டா, சி.வி.என்று பல பெயர்கள் உள்ளன.
உண்மையில், இந்த மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. எனவே, அத்தகைய வேறுபாடுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

பயோடேட்டா(Bio-data)
பயோடேட்டா என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களைப் பற்றியது. ஒருவரின் குடும்பப் பின்னணி, தனிப்பட்ட விபரங்கள், கல்வி, அனுபவம், திறன்கள், சாதனைகள், செயல்பாடுகள்(Activities), விருப்பங்கள், பொழுதுபோக்குகள் போன்றவைப் பற்றி விரிவான விவரங்களை இதில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்படும் விபரங்கள், தெளிவாக இருக்க வேண்டியது முக்கியம் என்றாலும், வளவளா கொழகொழா என்று இருக்கக்கூடாது. சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லியிருப்பதோடு, சுருக்கமாகவும் இருத்தல் வேண்டும். இல்லையெனில், இந்தக் குறையே உங்கள் மீதான எதிர்மறை எண்ணத்திற்கு(Negative impact) வழிவகுத்துவிடும்.
CV(Curriculum Vitae)
இந்த வகை விபர ஆவணம் தனிப்பட்ட நோக்கத்தால் ஆனது. ஒரு நபரின் கல்வித் தகுதி, இதர தகுதிகள் மற்றும் முந்தைய பணிகள் ஆகியவைப் பற்றிய சுருக்கமான மற்றும் தெளிவான விபரங்களைக் கொண்டிருப்பதே CV ஆகும். பயோடேட்டாவைப் போல, இதில் ஒருவரின் தனிப்பட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டியதில்லை.
இந்த வகை ஆவணம் தொழில் முறையிலானது. எனவே, தேவையற்ற விபரங்கள் அவசியமில்லை.
ரெஸ்யூம்(Resume)
ரெஸ்யூம் என்பது இன்றைய நிலையில் ஒரு பொதுவான பயன்பாடாக இருக்கிறது. இதில், ஒருவரின் தொழில்முறை(Professional) பின்னணி, கல்வி, அனுபவம் மற்றும் திறன்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். CV போலன்றி, ரெஸ்யூம் என்பது ஒரு தொழில்முறை வேலைவாய்ப்புக்கான ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆவணம்தான், உங்களைப் பற்றிய தேவையான, தெளிவான விபரங்களை வேலை வழங்குநருக்குத் தெரிவிக்கிறது.
பொதுவான அம்சங்கள்
இன்றைய நிலையில் பயோடேட்டா என்பது ஒரு காலாவதியான அம்சமாக ஆகிவிட்டது. CV மற்றும் ரெஸ்யூம் ஆகிய இரண்டு ஆவணங்கள்தான் நிறுவனங்களைப் பொறுத்தவரை புழக்கத்தில் உள்ளன. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒரு வேலைக்காக விண்ணப்பிக்கும்போது, ரெஸ்யூம் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், Scholarships, Fellowships, Academic grants, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் பணி வேண்டி விண்ணப்பித்தல் போன்ற விஷயங்களில் CV பயன்படுகிறது.
அதேசமயம், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வேலைக்காக விண்ணப்பிக்கும்போது CV பயன்படுத்தலாம். பெருமளவிலான வெளிநாட்டு வேலை வழங்குநர்கள், ஒருவரின் விண்ணப்பத்தில் அவரின் பிறந்த தேதி, தேசியம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விபரங்களை CV -ல் அறிந்துகொள்ள பெரிதும் விரும்புகின்றனர். இதுபோன்ற விபரங்கள் அமெரிக்க ரெஸ்யூம்களில் இடம் பெறுவதில்லை. இந்தியாவிலுள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், CV -க்கு பதிலாக ரெஸ்யூமையே விரும்புகின்றன.
எனவே, ரெஸ்யூம் மற்றும் CV ஆகிய இரண்டையுமே, சிறப்பாக தயாரிக்கும் கலையை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த இரண்டையுமே எப்போது வேண்டுமானாலும் தயாரிக்க வேண்டிய தேவை, ஒருவருக்கு ஏற்படும்.
தகவல்; தினமலர்.

8 comments:

  1. சொந்தமா எழுத முயற்சி பண்ணுங்க.

    ReplyDelete
  2. நல்ல செய்திதான். ஆனால் இன்னும் விளக்கமாக சொந்தமாக எழுதலாமே.

    ReplyDelete
  3. கருத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. , ரெஸ்யூம் மற்றும் CV ஆகிய இரண்டையுமே, சிறப்பாக தயாரிக்கும் கலையை ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி எழிலன். சில நல்ல தகவல்கள் அனைவருக்கும் போய்ச் சேரவே தினமலரின் இந்தச்செய்தியை பகிர்ந்திருக்கிறேன். மற்ற எந்தப் பதிவரின் செய்தியையும் காப்பி செய்யவில்லை. எனது ப.ஐய பதிவுகளைப் பாருங்கள். சொந்தமாகவும் எழுதி வருகிறேன்.

    ReplyDelete
  6. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  7. வேலை தேடுவோருக்கு உபயோகமான தகவல்.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி கவிப்ரியன்.

    ReplyDelete