28 February 2012

மற்றவர்களைக் கவருங்கள்நீங்கள் திறமைசாலியாக வேண்டுமா? அப்படியானால் முதலில் மற்றவர்களை கவருகின்ற அளவுக்கு உங்களது பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். எப்படி?

முதலில் தேவை புன்சிரிப்பு. இந்த புன்சிரிப்பே மற்றவர்களை உங்களை நோக்கி இழுக்கும். அகங்காரம் நிறைந்தவர்கள் முகத்திலும், கர்வம் நிறைந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு வராது. முகம் இறுகிக் கிடக்கும். அவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலக்கப்படுவார்கள். சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பவர்களுக்கு எந்தச் சபையிலும் தனி மவுசு இருக்கும்.

ஆரோக்கியம் பெண்களுக்கு மிக அவசியம். ஆரோக்கியமுள்ள பெண் எந்த வயதிலும் அழகாகத் தோன்றுவாள். உங்களிடம் இருக்கும்ப்ளஸ் பாயின்ட்என்ன, ‘மைனஸ் பாயின்ட்என்ன என்பதை அறியுங்கள். அழகிலும், உங்களிடம் இருக்கும் குறையைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் நிறைய மெருகேற்றுங்கள். அதற்கு தேவைப்பட்டால்ப்யூட்டி பார்லர்செல்லலாம்.திறமைசாலிகளுக்கு குண்டான உடல் இருக்கக்கூடாது. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, உணவுமுறைக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை சுத்தமாக வைத்திருப்பது சிறந்தது.

உங்களுடைய உடை நேர்த்தி, உங்கள் குணாதிசியங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வயதுக்கும், சூழ்நிலைக்கும் தக்கபடி பொருத்தமான உடைகளை அணியுங்கள். சிவந்த உடலைக் கொண்டவர்களுக்கு அடர்த்தியான திற உடைகளும், சுமாரான நிறம் கொண்டவர்களுக்கு இள நிற உடைகளும் பொருத்தமாகும்

நல்ல உடைகளை அணியும்போது மனதுக்கு 'தன்' உற்சாகம் பிறக்கும். அறுந்த பட்டன்கள், முறிந்த ஊக்குகள் கொண்ட உடைகளை வெளி உபயோகத்துக்குப் பயன்படுத்தக்கூடாது.

புதியவர்களோடு அறிமுகமாகும்போது வெட்கம், நாணத்தை தேவையில்லாமல் வெளிக்காட்டக் கூடாது. அது பலஹீனத்தின் அறிகுறி. பேசும்போது மற்றவர்களை சலிப்படைய வைத்து விடக்கூடாதுமிதமான குரலில் தெளிவான சிந்தனையில் பேசவேண்டும்.

மேலும் அப்படிப் பேசும்போது, தனது கௌரவத்தை விட்டுவிடல் ஆகாது. அன்பை வெளிப்படுத்த வேண்டும்.கோபத்தைக் குறைக்கப் பழகுங்கள். மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். தன்னிடம் இருக்கும் தவறுகளையும் களையத் தெரிய வேண்டும். எப்போதுமே உங்களை சுய பரிசோதனை செய்யத்தயாராய் இருங்கள்.

எந்த ஒரு செயலையும் அறிவு பூர்வமாக அணுகுங்கள். சின்னப் பிரச்னைகளுக்காக ஆவேசம் கொள்ளாதீர்கள்.

சொல்லிலும், செயலிலும் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்.
உங்களின் விமர்சன புத்தியை ஒதுக்க முன்வாருங்கள். மற்றவர்களிடம் இருக்கும் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, தேவைக்கு ஊக்குவியுங்கள்.

இதெல்லாம் இருந்தால், இருக்கிற துறையில் உங்களால் வேகமாக முன்னேறிவிட முடியும். உங்களிடமும் நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகிவிடும்.

20 February 2012

இன்று சபதம் எடுங்கள்...இப்போ, அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உங்களுக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...

குளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.


இனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலைசேஷன்...

இன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... இந்தியர்களாகிய நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை மேலும் கவலைக்கிடமாகி விடும்.

ஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள்,
ஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... நாம் விழித்துக் கொண்டாலன்றி...நம் ஊரிலேயே தயாராகும் பொருட்களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே நம்மிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

இந்திய பொருளாதாரத்தை  சீரழிக்கும் செயல் இது. கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், நம் தாகம் தீருமா? அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...

மல்டி நேஷனல் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், "கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...

இன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.

வெளிநாட்டு பொருட்கள் எவை, எவை... அவற்றுக்கு ஈடான இந்திய தயாரிப்புகள் எவை எனஉங்களுக்குத் தெரியுமா?
இதோ அது:

வெளிநாட்டு சோப்பு, பாத் ஜெல் போன்றவை: கேமி, பாமொலிவ், லக்ஸ், லைப்பாய், லிசான்சி, ஹமாம், ரெக்சோனா, லிரில், பியர்ஸ், டோவ்...


இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள்: நீம், மார்கோ, சிந்தால் உட்பட கோத்ரெஜ் கம்பெனிகளின் சோப்புகள், சந்தூர், விப்ரோ சிகக்காய், மைசூர் சாண்டல், எவிட்டா, நிர்மா பாத், சந்திரிகா, மெடிமிக்ஸ், கங்கா...

வெளிநாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்: சிபாகா, பெப்சோடன்ட், போர்ஹான்ஸ், குளோசப், கோல்கேட், மென்டாடென்ட்...

நம் தயாரிப்புகள்:வீகோ வஜ்ர தந்தி மற்றும் டாபரின் பற்பசைகள், நீம், பபூல், பிராமிஸ், புரூடென்ட்...

பல் துலக்கும் பிரஷ்கள், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகள்: போர்ஹான்ஸ், பெப்சோடன்ட், கோல்கேட், குளோசப்...

நம்முடையவை: புரூடென்ட், அஜந்தா, பிராமிஸ்...

ஷேவிங் க்ரீம் மற்றும் பிளேடு வெளிநாடு: பாமொலிவ், ஓல்டு ஸ்பைஸ், கில்லட், செவன் - ஒ - கிளாக், 365.

நம்முடையவை: கோத்ரெஜ், இமானி, சூப்பர் மேக்ஸ், டோபாஸ், லாசர், அசோகா...

வெளிநாட்டு முக பவுடர்:பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், ஷவர் டு ஷவர்...

நமது: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிளஸ்.
வெளிநாட்டு ஷாம்பு: ஹென்கோ, ஆல்கிளியர், நைசில், சன்சில்க்...
நம்மவை: லாக்மே, நிர்மா, வெல்வெட்...

— நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா?

19 February 2012

காதல் நல்லதா கெட்டதா?


பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டால் உலகம் முழுக்க உள்ள இளைஞர்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள். குறிப்பாக காதலித்துக் கொண்டிருப்பவர்கள்! காதலுக்குஅன்புஎன்று விளக்கம் சொல்வோரும் உண்டு. காமத்தின்துவக்கம்தான் காதல்என்று மாற்றுக் கருத்து சொல்வோரும் உண்டு. இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்கஇன்றைய இளைய சமுதாயம் காதல் பற்றி என்ன நினைக்கிறது?படிக்கும்போது காதல் அவசியமா?

கண்டிப்பா தவறானதுதான். அதையும் மீறி காதலித்தால் நம்முடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாது. படிப்பும் வராது. முழுக்க முழுக்க காதலன் அல்லது காதலியைத்தான் மனம் தேடும். யார் என்ன சொன்னாலும் காதில் விழாது. தன்னிலை மறந்து போவார்கள். இது ஆரம்பக் கட்டம்தான். நாளாக நாளாக ஊர் சுற்றத் தொடங்குவார்கள். சென்னையில் படிக்கும் பல மாணவிகள் தங்களது பாய் பிரண்டுடன் பீச், தியேட்டர் என்று ஊர் சுற்றுகிறார்கள். பாய் பிரண்டிடம்பாக்கட்மணிதீர்ந்து போனால் அப்படியே திரும்பி விடுகிறார்கள். இதை எப்படி காதல் என்று சொல்வது?


பதின்ம வயதில் (13 முதல் 19 வரை) நம் உடலுக்குள் ஹார்மோன் செய்யும் கலகம்தான் இந்தக்காதல். 21 வயதுக்கு மேல்தான் காதல் பற்றியே யோசிக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் 23 முதல் 25 வயதுக்குள் வரும் காதல்தான் உண்மையான காதலாக இருக்கமுடியும். அந்த வயதில்தான் காதலர்கள் இருவரும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். உண்மையான குணமும் தெரியவரும். மேலும் அப்போதுதான், இவரை திருமணம் செய்துகொண்டால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை உறுதி செய்யமுடியும்.


காதலிக்கும்போதுபாஸிட்டிவ்விஷயங்கள் மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். திருமணம் ஆன பிறகுதான் உண்மையான குணம் தெரியவரும். காதலித்து திருமணம் செய்த பிறகும் காதலர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அவர்கள் உண்மையாக காதலிக்கவில்லை என்றுதான் அர்த்தம்! டைம்பாஸூக்குத்தான் ஊர் சுற்றியிருப்பார்கள். காதல் திருமணம் 99% வெற்றி பெறவே செய்யாது. ஒரு சதவீதம் வேண்டுமானால் அதிர்ஷ்ட்டவசமாய் ஜெயிக்கலாம். அதுவும் இந்த சமுதாயம் தப்பாகப் பேசக்கூடாது என்ற எண்ணத்தில்தான் குடும்பம் நடத்துவார்கள். மற்றபடி அதுவும் உண்மையான காதலாய் இருக்காது.

அப்படியென்றால் நல்ல காதலுக்கான தகுதி……? முதலில்அழகைப் பார்த்து வருவது நிச்சயமாக காதலாக இருக்கமுடியாது. ஒருவருடைய அன்பைப் புரிந்துகொண்டு வருவதுதான் காதல். இரண்டாவதுஇரண்டு பேருக்குமே நல்ல குடும்பப் பின்னனி இருக்கவேண்டும். மூன்றாவதுநல்ல வேலை சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். நான்காவதுடாக்டராக உள்ளவர் டாக்டரையும், என்ஜினியராக உள்ளவர் ஒரு என்ஜினியரையோ காதலித்தால்தான் அது வெற்றியடையும். அதாவது தொழில் ரீதியான புரிதல் இருக்கும். இதே போல ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படைகள் இருந்தால்தான் காதலில் பிரச்னை வராது. காதலும் உண்மையானதாக இருக்கும்.காதலன் அழைக்கிறான் என்று காற்று வாங்கக்கிளம்பும் ஜோடிகளில், ஒவ்வொரு பெண்ணுக்கும், காதலனுக்கு அருகில் அவள் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தாலும், அப்பா, அம்மாவை ஏமாற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறோம் என்கிற மன உறுத்தல் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். உண்மையாக காதலிக்கிறார்கள் என்றால், இப்படி யாரும் ஊர் சுற்றமாட்டார்கள். நான் இந்தப் பையனை அல்லது பெண்ணை விரும்புகிறேன் என்று முதலில் தங்களது பெற்றோர்களிடம் சொல்லி அந்தக் காதல் கைகூட எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.

அன்பைப் பறிமாறிக்கொள்கிற தினம்தான் காதலர்தினம் என்றால் வருடம் முழுவதும் அன்பைப் பறிமாறிக்கொள்ளலாமேஏன் அன்று மட்டும், யாரையோ சந்தோஷப்படுத்த வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும்? அதனால் அப்படியொரு தினமே தேவையில்லை.


பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணத்திற்குப் பிறகு துணையைக் காதலிப்பதுதான் எல்லா வகையிலும் சிறந்தது. பெரிய அளவில் பிரச்னை வந்தால்கூட இரு தரப்பு பெற்றோரும் ஓடி வந்து உதவுவார்கள். அறிவுறை சொல்வார்கள். காதல் திருமணத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை.


சில நேரங்களில் சில பெண்கள் அந்தஸ்து, படிப்பு, வேலை இவை எல்லாவற்றையும் விட கீழான நிலையில் உள்ளவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இது போன்ற சூழலில் ஒரு பெண் காதலிப்பது, புதைகுழி என்று தெரிந்தும் அதற்குள் அவள் விழுகிறாள் என்றுதான் அர்த்தம். ஒருசிலர் வேண்டுமானால் சமூகத்தில் போராடி முன்னுக்கு வரலாம். ஆனால் பெரும்பாலும் தாழ்வுமனப்பான்மையினால் உறவுப்பிணைப்பே பெரும் சிக்கலாகி விவாகரத்தில் முடிந்துவிடுகிறது.

காதலிப்பதாக் கூறி ஒருவன் தன்னை வருத்திக்கொண்டால், பெண்கள் உடனே காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். பெண்களின் இந்த இரக்க குணமே அவர்களை படுகுழியில் தள்ளுகிறது. அதனால்தான் இவர்கள் எல்லா விஷயங்களிலும் எளிதில் ஏமாந்து போய்விடுகிறார்கள். தாங்கள் சோகமாக இருக்கும்போது யாராவது ஆறுதல் சொன்னால் கூட வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பிவிடுகிறார்கள்.முன்பெல்லாம் காதலில் தோற்றுப்போனால் ஆண்கள் தாடி வளர்த்தார்கள். மதுவுக்கு அடிமையானார்கள். பெண்கள் தற்கொலை வரைக்கும் போனார்கள். இப்போது அப்படி எல்லாம் கிடையாது. இந்தப்பெண் கிடைக்கவில்லை என்றால் அடுத்தப் பெண்ணைப் பார்க்கப் போய்விடுகிறான் பையன். பெண்ணும் அப்படித்தான்! காதலில் தோற்று தற்கொலை வரை போவது மிக மிக அரிது. இதுதான் இன்றைய உண்மை நிலவரம்! இதுவே பெரிய மாற்றம்தானே


காதலில் விபத்தாய் தடுக்கி விழுந்து ஆலமரமாய் எழுந்து நின்றவர்களும் இருக்கிறார்கள்; அந்த விபத்திலே கீழே விழுந்து, வாழ்க்கை முகவரியைத் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்