17 June 2012

மெட்ரோ ரயில் பிரியங்கா!



பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ளமெட்ரோ ரயில் நிலையம்...
வண்ணமயமான சிறகு ஒன்று, காற்றில்மிதந்து வருவது போல மெட்ரோரயில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கடைசியாகடிரைவர் கேபினில் இருந்து விமான பைலட்போல ஒரு பெண் இறங்கினார். அவர் தான்.....

மெட்ரோ ரயிலின்முதல் பெண் டிரைவர். பெயர்பிரியங்கா. வயது: 21.

வீட்டிற்கு போகும் அவசரத்திலும், புன்னகைசிந்தியபடி, தான் மெட்ரோ ரயில்ஓட்டுனரான கதையை கூறினார். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில்டிப்ளமோ முடித்தவர். மின்சார பயன்பாட்டில் அதிகசக்தியுடன் இயங்கும் மெட்ரோ ரயில் ஓட்டுனராகவேண்டும் என்பது இவர் கனவு.
இதற்காக நிறைய படித்து, நிறையஉழைத்து, தன் கனவை நனவாக்கிவிட்டார்.

டில்லி சென்று, அங்குள்ள மெட்ரோரயிலை, ஆறு மாதகாலம் ஓட்டி, பயிற்சி எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பும், சிக்னல்களின் முக்கியத்துவம் குறித்தே நிறைய வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின், பெங்களூரில் ஓடும் மெட்ரோ ரயிலின்முதல் பெண் டிரைவராக நியமனம்பெற்று, ஆயிரம் பயணிகளுடன் மகாத்மாகாந்திரோடு நிலையத்தில் இருந்து, பையனப்பஹள்ளி வரை, ரயிலை ஓட்டியமுதல் அனுபவம் மறக்க முடியாதது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த திரில்லான நேரமதுஎன்கிறார்.


வெற்றிகரமாக இவர் மெட்ரோவை இயக்கிவருவதை அடுத்து, தற்போது மேலும், மூன்றுபெண்கள், மெட்ரோ டிரைவராக நியமனம்பெற்றுள்ளனர்.
வேலை முடிந்ததும், பஸ்சை பிடித்து பெங்களூரில்இருந்து, 30 கி.மீ., தூரத்தில்உள்ள, தன் கனகபுரா கிராமத்திற்குபோய் விடுகிறார்.

விவசாயியின் மகளான இவர், தற்போது, வீட்டிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தாலும், நகரத்திற்கு இடம் பெயரவில்லை, காரணம், இனிமையான கிராம வாழ்க்கை பிடித்துவிட்டது இவருக்கு. மெட்ரோ ரயிலை பிரமாதமாக ஓட்டும்பிரியங்காவிற்கு, இன்னமும் சைக்கிள் ஓட்டத் தெரியாது.

நன்றி; தினமலர்.

12 June 2012

பெண் பிள்ளைகள் முன்னேறுவது எப்படி?

  
  •  தினசரி ஏதாவது செய்தித்தாள் படியுங்கள். பிடித்த விஷயம்,   பிடிக்காதவிஷயம் என அனைத்தையும் படியுங்கள். (விளம்பரங்கள் உட்பட)  

  • சுதந்தரமாக வெளியில் செல்லப் பழகுங்கள். கடை, கோயில், வங்கி, அஞ்சல் அலுவலகம் என…  
  •  ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். தையல், சைக்கிள் ஓட்ட, மொபெட் ஓட்ட, ஓவியம் வரைய…
  • அக்கம் பக்கம் பெண்களுடன் இனிமையாக நட்புணர்வோடு பழகுங்கள்.
  • எதுவாக இருந்தாலும் நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுங்கள்.
  • உங்கள் மனதில் படும் கருத்துக்களை தாராளமாக வெளியே சொல்லப் பழகுங்கள். 
  • சின்னச்சின்ன விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், பனவிடை அனுப்ப, பதிவுத்தபால் அனுப்ப, எலக்ட்ரிகல் ப்யூஸ் போட, பல்ப் மாற்ற, எதற்காவது மனு எழுத, வங்கியில் வரைவோலை எடுக்க…
  • சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், தொலைபேசி அலுவலகம், காவல் துறை, மருத்துவமனை என அனைத்து தொலைபேசி எண்களையும் குறித்து வையுங்கள். 
  • நிறைய விஷயங்கள் தெரியத்தெரிய நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
  • இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று அங்காலாய்பவர்களா நீங்கள்……. நீங்கள் வாழ்ந்துதான் என்ன ஆகப்போகிறது?!

ஆள் மாற்று விளையாட்டு!
 
'பலருக்கு இங்கே காதல் என்பது திருமணச்
சடங்குகளுக்கு முன்னதான பொழுதுபோக்கு!
சிலருக்கு அது திருமணச் சடங்கிற்குப்
பின்னதான ஆள் மாற்று விளையாட்டு!'

- அறிவுமதி.