- தினசரி ஏதாவது செய்தித்தாள் படியுங்கள். பிடித்த விஷயம், பிடிக்காதவிஷயம் என அனைத்தையும் படியுங்கள். (விளம்பரங்கள் உட்பட)
- சுதந்தரமாக வெளியில் செல்லப் பழகுங்கள். கடை, கோயில், வங்கி, அஞ்சல் அலுவலகம் என…
- ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். தையல், சைக்கிள் ஓட்ட, மொபெட் ஓட்ட, ஓவியம் வரைய…
- அக்கம் பக்கம் பெண்களுடன் இனிமையாக நட்புணர்வோடு பழகுங்கள்.
- எதுவாக இருந்தாலும் நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுங்கள்.
- உங்கள் மனதில் படும் கருத்துக்களை தாராளமாக வெளியே சொல்லப் பழகுங்கள்.
- சின்னச்சின்ன விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், பனவிடை அனுப்ப, பதிவுத்தபால் அனுப்ப, எலக்ட்ரிகல் ப்யூஸ் போட, பல்ப் மாற்ற, எதற்காவது மனு எழுத, வங்கியில் வரைவோலை எடுக்க…
- சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், தொலைபேசி அலுவலகம், காவல் துறை, மருத்துவமனை என அனைத்து தொலைபேசி எண்களையும் குறித்து வையுங்கள்.
- நிறைய விஷயங்கள் தெரியத்தெரிய நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
- இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று அங்காலாய்பவர்களா நீங்கள்……. நீங்கள் வாழ்ந்துதான் என்ன ஆகப்போகிறது?!
ஆள் மாற்று விளையாட்டு!
'பலருக்கு இங்கே காதல் என்பது திருமணச்
சடங்குகளுக்கு முன்னதான பொழுதுபோக்கு!
சிலருக்கு அது திருமணச் சடங்கிற்குப்
பின்னதான ஆள் மாற்று விளையாட்டு!'
- அறிவுமதி.
வணக்கம் நண்பரே!
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.
தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு