27 January 2012

ஆதிவாசி மக்களோடு வித்தியாசமான குடியரசு தின கொண்டாட்டம்


ஒடிஸாவின் ராயகடா மாவட்டத்தின் காசிபூர் தாலுக்காவில் ஒருசிறிய பகுதி டிக்கிரி. அலுவலக விஷயமாக இங்கு வந்து சில நாட்களாக தங்கியிருக்கிறேன். மிகச்சிறிய இரயில் நிலையம். எந்தப்பக்கம் திரும்பினாலும் மலை, மலைதான். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி நிலப்பகுதிதானே! அதனால் குளிர் கொஞ்சம் கூடவே வாட்டுகிறது. இன்னும் குளிர் தன் பணியை விட்டபாடில்லை. அருமையான தட்பவெப்பநிலை.


எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு அப்போதுதான் கட்டப்பட்ட வீடு. பணிகள் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. அறுபதடி ஆழத்தில் ஒரு கிணறு. அதிலிருந்துதான் தண்ணீர் இறைத்துப் பயன்படுத்த வேண்டும். இங்கே மின் விநியோக முறையை நினைத்தாலே வயிறு எரியும். ஆனால் மின்விளக்குதான் எரியாது.

இங்குள்ளவர்கள் வேடிக்கையாக 'பவரும் டவரும்' இங்கே கியாரண்டி இல்லை என்று சொல்கிறார்கள். ஏர்டெல் தவிர்த்து வேறு எந்த நெட்வொர்க்கும் சரியாக செயல்படுவதில்லை. எப்போதாவது பி.எஸ்.என்.எல். அல்லது ரிலயன்ஸ். மின்சாரம் சொல்லவே வேண்டாம். எப்போது போகும் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதுவும் மிகக் குறைந்த LOW VOLTAGE  மின்சாரம். இந்த வெளிச்சத்தில் புத்தகம் கூட படிக்க முடியாது.


மின்சாரம் வரும். அடுத்த பத்து நிமிஷத்துலேயே போகும். பன்னிரண்டு மணிநேரத்துக்கு வராது. இங்குள்ள மக்களுக்கோ இது பழகிப்போன ஒன்று. இத்தனைக்கும் ஆதித்ய பிர்லாவின் ‘உத்கல் அலுமினா(UTKAL ALUMINA) இங்குதான் உள்ளது. திரும்பிய இடமெல்லாம் மலைத்தொடர்களே... அதுவும் அலுமினிய உற்பத்திக்கு முக்கியமான தாதுப்பொருளான பாக்ஸைட் மலைத்தொடர்களாக... என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பனி (NALCO) கூட இங்கு பக்கத்தில்தான் இருக்கிறது.

வேறு ஒரு நிறுவனம் ஆயிரக்கனக்கான ஏக்கரில் நிலங்களையும், மலைகளையும் வளைத்துப்போட்டு சுற்றுச்சுவர் எழுப்பி வருகிறது. சுற்றுச்சுவர் என்பது நிலப்பகுதியில் மட்டுமில்லை. மிக உயரமான மலைமீதும் சுற்றுச்சுவர் எழுப்பபட்டிருக்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் அதன் தோற்றம் சீனப்பெருஞ்சுவரை ஞாபகப்படுத்தாமல் போகாது.குடியரசு தினத்தில் டிக்கரியைச் சுற்றியுள்ள சுமார் ஐந்தாறு கிராமங்களுக்கு கொடியேற்றத்தில் பங்கு கொள்ள கிளம்பினோம். எல்லமே ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்கள். விடியற்காலை 5 மணிக்கு நான் குளிக்கும்போதே தெருவில் ஊர்வலமாய் பிள்ளைகள் ‘ரகுபதி ராகவ ராஜாராம் பாடிக்கொண்டும், ‘பாரத் மாதாகி ஜே என்று கோஷமிட்டுக்கொண்டு போனதும் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. தங்கள் பாடசாலை மட்டுமல்லாது அருகிலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் அவர்கள் சென்று குடியரசு விழாவில் கலந்து கொண்டதும் வியப்பையே தந்தது.வழக்கமாய் எங்கள் நிறுவனத்தில் மட்டுமே கொடியேற்றிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுகிற நான் இந்த வருடத்தில் ஒரே நிகழ்ச்சிக்காக தொடர்ந்து ஐந்தாறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மறக்க முடியாத நிகழ்வாகும். மற்றவற்றை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

24 January 2012

கண்தானம்: ஏன்? எப்படி?


இந்தியாவில் கண் பார்வையற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? கண் பார்வையற்றவர்களில் அதிகமானவர்கள் ஆண்களா? பெண்களா?

இந்தியாவில் கோடியே 50 லட்சம் பேர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60-70 சதவீத பார்வைக்குறைபாடு தவிர்க்க அல்லது குணப்படுத்தக் கூடியது. அதில் ஆண்,பெண் மற்றும் குழந்தைகள் அனைவரும் அடங்குவர். உலகஅளவில் ஏறக்குறைய கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். 


இந்தியாவில் கண் பார்வையற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? கண் பார்வையற்றவர்களில் அதிகமானவர்கள் ஆண்களா? பெண்களா?

இந்தியாவில் கோடியே 50 லட்சம் பேர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60-70 சதவீத பார்வைக்குறைபாடு தவிர்க்க அல்லது குணப்படுத்தக் கூடியது. அதில் ஆண்,பெண் மற்றும் குழந்தைகள் அனைவரும் அடங்குவர். உலகஅளவில் ஏறக்குறைய கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். 

தாய் வயிற்றில் சிசு உருவாகும் போது கண் எத்தனை வாரத்தில் அல்லது மாதத்தில் உருவாகும்? கண்கள் எப்படி உருவாகின்றன?

கண்களின் வளர்ச்சி கரு உருவான 22-ம் நாளிலிருந்தே தொடங்கி விடுகிறது. கண்ணின் வெவ்வேறு பகுதிகள் கரு உருவானவுடன் ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரைநீடிக் கின்றது. கண்ணில் உள்ளலென்ஸ் என்ற கண்ணாடி போன்ற உறுப்பு 27-ம் நாளி லிருந்தும், கருவிழி 40-ம் நாளிலிருந்தும் உருவாக தொடங்குகிறது. கண் தசைகள் 5-வது வாரத்திலிருந்தும், கண் நரம்பு 6-வது வாரத்திலிருந்தும், கண்ணின் இமை 2-வது வாரத்திலிருந்தும் உருவாகிறது. கண்ணின் விழித்திரை 3-வது வாரம் முதல் தொடங்கி, அதன் முக்கியமான பகுதியான மேக்குலா மற்றும் ரத்தக்குழாய்கள் குழந்தை பிறந்து வாரம் வரை வளர்கின்றது. 

கண்ணில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்புமண்டலம் குழந்தை பிறக்கும் முன்னே உருவானாலும் அதன் வளர்ச்சி குழந்தை பிறந்த வாரத்தில்தான் முழுமையடைகிறது. எனவேதான் பிறந்தவுடனே குழந்தைகளுக்கு பார்வை இருந் தாலும், ஒரு பொருளை சீராகவும், கூர்மையாகவும் நோக்கும் திறன் குழந்தை பிறந்த முதல் வாரங்களில்தான் கிடைக்கின்றது.

முதலில் பார்வையுடன் பிறந்து, பின்பு கருவிழி பாதிப்பினால் பார்வையிழப்பு ஏற்பட என்ன காரணங்கள்?

கண்களில் அடிபடுதல், கண்களில் புண் ஏற்படுதல், கண்களில் வேதிப்பொருள்கள் படுதல் போன்றவைகளால் கருவிழி பாதிப்பு ஏற்படும்.


பார்வையிழப்பு ஏற்பட்டவர்கள் தங்களுக்கு தேவைப்படும் கண்களுக்கு எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும்?

முதலில் கண் மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்ய வேண்டும். பின்பு அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பதிவு செய்து கொள்ளலாம். கண் வங்கியுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு கருவிழிகள் தேவைப்படுகின்றன? எவ்வளவு கிடைக்கிறது?

ஒரு ஆண்டிற்கு தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை சுமார் 75000 முதல் 1,00,000 வரை. ஆனால் தற்பொழுது கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 13000 முதல் 14000 வரை மட்டுமே!

கண்தானம் செய்ய விரும்புகிறவர்கள் அனைவரின் ஆசையும் நிறைவேறி விடுகிறதா? அல்லது அவர்களது மரண சூழலில் அது நிறைவேறாமலே போய் விடுகிறதா?

ஒருவர் கண்தானம் செய்யவிருப்பப்பட்டால் கண் வங்கியை அணுகி முதலிலேயே பதிவு செய்து கொள்ளலாம். எதிர்பாராத விதமாகஅவர்கள் இறக்க நேரிடும்போது, சிலசமயம் அந்த மரணச் சூழலில் அவர்களது உறவினர்கள் கண் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவிக்காவிட்டால் அவர்களின் ஆசைநிறைவேறாமல் போய்விடுகின்றது. 

எனவே கண்தானம் செய்ய விரும்புவோர், பதிவு செய்வது மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினரிடமும் அதை தெரிவிக்கவும் வேண்டும். ஒருவர் குடும்பத்தில் இறப்பு என்பது அனைவருக்கும் வருத்தம் தருவதாகத்தான் இருக்கும். அந்தச் சூழ்நிலை யிலும் இறந்த உடனே விரைவாகச் செயல்படுவதன் மூலம் இறந்தவர்களுடைய கண்தான ஆசையை நிறைவேற்ற முடியும்.


ஒருவர் இறந்து எத்தனை மணி நேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட வேண்டும்? கண்களில் இருந்து எந்த பகுதி எடுக்கப்படுகிறது? எடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? எத்தனை டாக்டர்கள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும்? கண் எடுக்கப்பட்ட பகுதியில் ஏதேனும் அடையாளம் தெரியுமா?

ஒருவர் இறந்த முதல் மணி நேரத்திற்குள் அவரது கண்கள் எடுக்கப்பட வேண்டும். முழுக்கண்களுமே எடுக்கப்படுகிறது. 20 முதல்30 நிமிடங்களில் கண்தானம் முடிந்து விடும். கண்வங்கி குழுவில் ஒரு மருத்துவர், மற்றும் இரண்டு செவிலியர்கள் இருப்பர். இறந்தபின் கண்களை எடுப்பதினால் முகம் விகாரமாகவோ, முகத்தோற்றத்தில் மாறுதலோ ஏற்படாது.

எடுக்கப்படும் கண்களை அடுத்து என்ன செய்வீர்கள்? எப்படி பாதுகாக்கப்படுகிறது? எப்படி இன்னொருவருக்கு பொருத்தப்படுகிறது? அது எத்தனை மணிநேர ஆபரேஷன்?

எடுக்கப்படும் கண்கள் ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டு கண்வங்கிக்கு எடுத்துசெல்லப் படுகிறது. கண்வங்கியில் ரசாயன திரவங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அங்கு கண் நிபுணர்களால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தரமான கருவிழிகள் அறுவை சிகிச்சைக் காக எடுத்து வைக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட கருவிழிகள் ஆராய்ச்சிக்காக பயன் படுத்தப்படுகிறது. 

கண் மருத்து வர்களால் பரிசோதிக்கப்பட்டு கண்வங்கியில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் பெயர்ப் பட்டியல் எடுக்கப்பட்டு தகுந்த நோயாளிகள் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்படுவர். பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அந்த அறுவைசிகிச்சை மணி நேரத்திலிருந்து மணிநேரம் வரைநீடிக்கும்.

பொருத்தப்படும் 100 சதவீத கண்களும் முழு சக்தியுடன் பார்வை தருமா? சிலருக்கு கண் பொருத்தினாலும் பார்வை கிடைக்காது என்கிறார்களே ஏன்?

கண்தானம் பெறப்படும் கண்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு பொருத்தப்படும். தரமான கண்கள் பார்வைக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக பயன் படுத்தப்படும். சற்று தரம் குறைந்த கண்கள் கண்புண் ஏற்பட்ட நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் எவ்வளவு பார்வை கிடைக்கும் என்பதை கூற முடியாது. (சில சமயங்களில் பார்வைகிடைக்க வாய்ப்பு இல்லாமலும் போகலாம்)

கண் வங்கிகளின் செயல்பாடுகள் என்ன?

பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்களை தானமாக பெறுவதற்காக தயார் நிலையில் கண் வங்கிகளில் இருப்பார்கள். கண்தான அழைப்பு வந்தவுடன் கண் குழுவினர்களை ஒருங்கிணைத்து சரியான நேரத்திற்கு அனுப்புதல், பெறப்பட்ட கண்களை பதப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துதல், பரிசோதனை செய்யப் பட்ட நல்ல நிலையில் உள்ள கருவிழிகள் மட்டும் மருத்துவருக்கு அனுப்புதல், மாற்று அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்த இயலாத கண்களை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளுக்கும், கண்கள் பதப்படுத்துதல் குறித்த ஆராய்ச்சிக்கும் மற்றும் பயிற்சி கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தல், கண் நிபுணர் அல்லாத பொது மருத்துவர் களுக்கு சரியான முறையில் கண்களை எடுப்பது குறித்து பயிற்சி அளித்தல், இவை அனைத்தும் கண் வங்கியின் செயல்பாடுகள்.

யார் யார், எந்த வயது முதல் - எந்த வயது வரை கண்தானம் செய்யலாம்?

ஆண், பெண் இருபாலரும் எந்த வயதிலும் கண்தானம் செய்யலாம். கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம். ரத்த அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கண்தானம் செய்யலாம்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கண் பார்வை யற்றவர்களாக இருக்க என்ன காரணம்?

பரம்பரையாக வரும் கண் நோய்களால் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கண் பார்வையற்றவர்களாக இருக்க லாம். சில கண் நோய்கள் பரம்பரை ரீதியாக வரக் கூடியது.

உங்கள் கண் மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை எப்போது தொடங்கப்பட்டது. முதல் வருடத்தில் எத்தனை கருவிழிகள் கிடைத்தன? கடந்த ஆண்டில் (2010) எவ்வளவு கருவிழிகள் கிடைத்தன?

கோவைஅரவிந்த் கண் மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை 1997-லிருந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பகாலத்தில் 38 கண்கள் மட்டுமே தானமாக பெறப்பட்டது. தற்பொழுது, அரிமா சங்கங்கள் மற்றும் ஊக்குவிப்பவர்களின் உதவியின் மூலமாக 2010-ல் 1410 கண்கள் பெற்று எங்களுடைய சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். கண்தானம் பற்றிய விழிப்புணர்வு முன்பைவிட இப்பொழுது அதிகரித்துள்ளது. கண்தான வாரம் போன்றவைகளை கொண்டாடு வதாலும் மாணவர்கள் மற்றும் பொதுநல சங்கங்கள் உதவுவதாலும் இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

கண்தானம் -  ஏன்? எப்படி?
முழு விளக்கம் பதில் அளித்தவர்கள்: டாக்டர் ஆர். ரேவதிடாக்டர் வி. ராஜேஷ் பிரபுஅரவிந்த் கண் மருத்துவமனை, கோயம்புத்தூர்.

18 January 2012

பெண் சிங்கம்மேற்கு வங்கம் என்றால், உடனே சிலிர்த்திடும் சிங்கமாக நினைவிற்கு வருபவர், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜிதான்; ஆனால், அங்கே இன்னொருவரும், பெண் சிங்கமாக உலாவி வருகிறார்.
இவரது பெயர் சுசிதா தாஸ். கோல்கட்டாவில் உள்ள பிரபலமான புகைப்படக் கலைஞர். மேற்கு வங்கத்தை, அவ்வப்போது அச்சுறுத்தும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை படமெடுப்பதுதான், இவரது பிரதான வேலை.பள்ளியில் படிக்கும் போதே, புகைப்படக் கலையின் மீது ஏற்பட்ட விருப்பம் காரணமாக, முழு நேர புகைப்படக் கலைஞரானார். பிரபலமான புகைப்படக் கலைஞர்கள் ரகுராய், அதுல் காஸ்பர், நேஷனல் ஜியாகிராபி போட்டோகிராபர் ஸ்டீவ் மெக்கரி ஆகியோரது பயிற்சிப் பட்டறையில் படித்து, தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டார். அதன் பிறகு, பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு, புகைப்படக்காரராக பணியாற்றினார்.


இவர் எடுத்த புகைப்படங்கள், சர்வதேச அளவில் பல பத்திரிகைகளில் வந்துள்ளன. இதன் காரணமாக, விருதுகளும் குறைவின்றி குவிந்துள்ளன.
சுனாமி, பூகம்பம், வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களின் போது, மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சொல்வதற்காக, துணிந்து, தனியாக களத்தில் இறங்கி, படமெடுத்து, மக்களின் துயரங்களை, துன்பங்களை உலகிற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, பல சமயங்களில் உதவியாக இருந்துள்ளார்.


இதைவிட, இவர் பெருமையாக கருதுவது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளின் போது, பல ஆண் போட்டோகிராபர்களே காட்டுக்குள் போய், குண்டு மழைக்கு நடுவே படமெடுக்க தயங்கிய வேளையில், முதல் ஆளாக கேமராவைத் தூக்கிப் போய், படமெடுத்து வந்துள்ளார்.


உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள இவர், தான் எடுத்த புகைப்படங்களை பல முறை கண்காட்சிகளாகவும் வைத்துள்ளார். குறைந்த செலவில், அனைவருக்கும் போட்டோகிராபி கற்றுக் கொடுக்க வேண்டும்; அதிலும் குறிப்பாக, எல்லாத் துறைகளிலும் முன்னேறி, பத்திரிகை புகைப்படத் துறையில் மட்டும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்கு, இதில் ஆர்வத்தை ஏற்படுத்தி வளர்த்து விட வேண்டும் என்பது இவரது லட்சியம். இந்த லட்சியம் நிறைவேற, தற்போது, "இமேஜ் ரீடிபைண்டு' என்ற புகைப்படப் பள்ளியை நடத்தி வருகிறார்.

சுசிதா தாஸ் பற்றியும், அவரது புகைப்பட பயிற்சி பள்ளி பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள, சுசிதா தாஸின் இந்த இணைய தளத்திற்குப் போய் பார்க்கலாம்.


நாம் பெற்ற அறிவை எப்படி வாழ்கைக்கு உபயோகிப்பது?

அது ஒரு பழக்கம். மனப்பழக்கம். ஒவ்வொரு முறையும் நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்து, ‘ஏன்? எப்படி?என்று கேட்டுப் புரிந்துகொள்ளும் போது நமது மன இயக்கத்தை நாம் புரிந்து கொள்கிறோம். நமது மன இயக்கத்தை நம் கைக்குள் கொண்டு வருகிறோம்.

‘நம் மன இயக்கத்தை நிர்வகிக்கும் முழுப் பொருப்பும் நம் கைக்குள் இருக்கிறது என்ற எண்ணம் நம் அடிமனத்தில் சதா ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.என்கிறார் ஹிப்னாடிசத்தைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ள ஒரு மருத்துவ அறிஞர்.

15 January 2012

தமிழர் திருநாள் (பொங்கல்) வாழ்த்து!அடித்தள மக்களிடமோ
அறியாமை இருட்டு
போதை மயக்கத்திலோ
இளைய தலைமுறை
எங்கும் எதிலும்
இலஞ்சமும் ஊழலும்
மனக்குமுறலை உரமாக்கி
வீரத்தை நீராக்குவோம்
சுயமரியாதை உணர்த்திய
பெரியாரின் கொள்கையால்
மேதைகள் போற்றிய
பொதுவுடைமை சிந்தனையால்
சமுதாய சீர்திருத்த
அறுவடை செய்வோம்
இதயம் நிறைந்த
பொங்கல் வாழ்த்துக்கள்!


என்றென்றும் அன்புடன்,
- எம்.ஞானசேகரன்.

14 January 2012

மின்வெட்டு - தீர்வுதான் என்ன?- 2


இந்தியாவின் முக்கியப் பிரச்னைகளில் எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை முதன்மையானது என்பதை எவருமே மறுக்க முடியாது. அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே. ஆனால், நமது மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு அணு உலைகள் மட்டுமே வழி என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அந்த எண்ணத்தை நம்மிடம் எவரெவர் எப்படி உருவாக்கினார்கள்? என்னென்ன தரவுகளை அளித்தார்கள்? எந்த தர்க்கங்களைச் சொன்னார்கள்? எப்படி இதை நாம் நம்ப ஆரம்பித்தோம்

இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் முழுக்கவே அணு உலைகள் ஆற்றல் உற்பத்திக்கு லாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்து விட்டார்கள் என்பதே உண்மை. உலகிலுள்ள அணு உலைகளை மூடும் நடவடிக்கைகள் வேகமாக முடுக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால், அணு உலைகள் மிக மிக அதிகமாகச் செலவு பிடிப்பவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அணு உலைகளுக்குத் தேவைப்படும் பிரமாண்டமான முதலீட்டையும் தொடரும் நிர்வாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்திமுறைகளுக்குச் செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள் தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும் என நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். 


இந்தியாவில் அணு உலைகளை விட்டால் இதுவரை இங்குள்ள மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பெரும் முயற்சிகள் என்னென்ன? அணு உலைகளுக்கு செலவிடப்படும் தொகையில் பாதியாவது அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதா? நாமறிய எந்த ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதல்லவா உண்மை

இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் (world resources institute) கூறுகிறது. உலக அளவில் இதன் அதிக சராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை. இன்னொன்று, இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை. ஆக, நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை. 

காரணம் என்ன? இந்தியாவில் பெரும்பாலான மின்கம்பிகள் தலைக்கு மேலே செல்கின்றன. ஆகவே அவை அறுந்து விழாத உலோகத்தில் தடிமனாக அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவை அளிக்கும் மின்தடை பெரும் மின்சார இழப்புக்குக் காரணமாக அமைகிறது. திருட்டுக்கும் வழிவகுக்கிறது. மின்னிழப்பு உருவாகாத வகையில் நவீன மின்கடத்திகளை மண்ணுக்கடியில் போட்டு மின்வினியோகம் செய்யலாம், உலகின் வளர்ந்த நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் அதற்கான பெரும் முதலீடு நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. 


ஆனால், கூடங்குளம் போன்ற ஒரே ஒரு அணு உலை அமைக்க நாம் செலவிடும் தொகை கோடிக்கு மேல் சென்றிருக்குமென கணக்கிடப்படுகிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அதன் அணுக்கழிவு பராமரிப்புக்குத் தேவையாம். இந்தத் தொகை இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிட முடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். அt-family: Latha;">கோடிக்கு மேல். இன்று அது ரூ.4000 கோடிக்கு மேல் சென்றிருக்குமென கணக்கிடப்படுகிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அதன் அணுக்கழிவு பராமரிப்புக்குத் தேவையாம். இந்தத் தொகை இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிட முடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை. 


நெடுந்தூரம் மின்சாரத்தைக் கொண்டுசென்று மின்னிழப்பு உருவாக்குவதற்கு பதிலாக இந்தத் தொகையைச் செலவிட்டு இந்தியாவில் பல்வேறு சிறிய மின்திட்டங்களை அமைத்து ஆற்றல் பற்றாக்குறையை எளிதில் ஈடுகட்ட முடியும். அதைப்பற்றி ஏராளமான நிபுணர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால், அவற்றை நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்வதில்லை. அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால், அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை. அது ஆளும் தரப்புக்கு மிக வசதியானது. 

இரண்டாவதாக, இந்த அணு உலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன. இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குத்தான் உண்மையில் சென்று சேர்கிறது. அந்நாடுகள் தங்கள் காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கின்றன. ஈடாக பெரும் பணமும் பெற்றுக்கொள்கின்றன. பேரங்கள் ராணுவ ரகசியங்களாகவும் எஞ்சுகின்றன. இந்நாடுகளின் ரகசியபேரங்களும் ஆள்பிடிப்பு வேலைகளும்தான் அணு உலைகளுக்குப் பின்னால் உள்ள தூண்டுதல்கள். 


மூன்றாவதாக, சர்வதேச நிதியங்கள் இம்மாதிரி திட்டங்களுக்கு தேவையான கடன்களைக் கொடுக்கின்றன. உண்மையான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவை நிதி அளிப்பதில்லை. இந்த நிதியங்களில் அதிக முதலீடு செய்துள்ளவை இந்த அணு உலைகளை நமக்கு விற்கும் நாடுகளேதான். அதாவது தரம் கெட்ட பொருளை நமக்கு விற்பதோடு அவற்றை வாங்குவதற்கான கடனையும் அவையே வட்டியுடன் நமக்கு அளிக்கின்றன. மொத்தத்தில் நாம் கடன் வலைக்குள் விழுகிறோம். 

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள். 

ஆகவே, அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.

தொடர்புடைய இடுகை; மின்வெட்டு தீர்வுதான் என்ன?