28 April 2010

எனக்குப் பிடித்த கவிதை


நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

‘அனுபவிக்கத்’ தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

- கல்யான்ஜியின் ‘முன்பின்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.


படித்ததில் பிடித்தவை !

‘உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை’.



இரக்கம்

கதவைத் திறக்கும்போது
காதல் சந்நிதானத்தையே
பிடித்துவிடுகிறது.

2 comments:

  1. நன்றி கல்யாண்ஜியின் கவிதையை ஞாபகப்படுத்தியதற்கு

    ReplyDelete
  2. என் நன்றியும் சந்தோசங்களும்.

    ReplyDelete