19 February 2012

காதல் நல்லதா கெட்டதா?


பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டால் உலகம் முழுக்க உள்ள இளைஞர்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள். குறிப்பாக காதலித்துக் கொண்டிருப்பவர்கள்! காதலுக்குஅன்புஎன்று விளக்கம் சொல்வோரும் உண்டு. காமத்தின்துவக்கம்தான் காதல்என்று மாற்றுக் கருத்து சொல்வோரும் உண்டு. இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்கஇன்றைய இளைய சமுதாயம் காதல் பற்றி என்ன நினைக்கிறது?படிக்கும்போது காதல் அவசியமா?

கண்டிப்பா தவறானதுதான். அதையும் மீறி காதலித்தால் நம்முடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாது. படிப்பும் வராது. முழுக்க முழுக்க காதலன் அல்லது காதலியைத்தான் மனம் தேடும். யார் என்ன சொன்னாலும் காதில் விழாது. தன்னிலை மறந்து போவார்கள். இது ஆரம்பக் கட்டம்தான். நாளாக நாளாக ஊர் சுற்றத் தொடங்குவார்கள். சென்னையில் படிக்கும் பல மாணவிகள் தங்களது பாய் பிரண்டுடன் பீச், தியேட்டர் என்று ஊர் சுற்றுகிறார்கள். பாய் பிரண்டிடம்பாக்கட்மணிதீர்ந்து போனால் அப்படியே திரும்பி விடுகிறார்கள். இதை எப்படி காதல் என்று சொல்வது?


பதின்ம வயதில் (13 முதல் 19 வரை) நம் உடலுக்குள் ஹார்மோன் செய்யும் கலகம்தான் இந்தக்காதல். 21 வயதுக்கு மேல்தான் காதல் பற்றியே யோசிக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் 23 முதல் 25 வயதுக்குள் வரும் காதல்தான் உண்மையான காதலாக இருக்கமுடியும். அந்த வயதில்தான் காதலர்கள் இருவரும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். உண்மையான குணமும் தெரியவரும். மேலும் அப்போதுதான், இவரை திருமணம் செய்துகொண்டால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை உறுதி செய்யமுடியும்.


காதலிக்கும்போதுபாஸிட்டிவ்விஷயங்கள் மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். திருமணம் ஆன பிறகுதான் உண்மையான குணம் தெரியவரும். காதலித்து திருமணம் செய்த பிறகும் காதலர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அவர்கள் உண்மையாக காதலிக்கவில்லை என்றுதான் அர்த்தம்! டைம்பாஸூக்குத்தான் ஊர் சுற்றியிருப்பார்கள். காதல் திருமணம் 99% வெற்றி பெறவே செய்யாது. ஒரு சதவீதம் வேண்டுமானால் அதிர்ஷ்ட்டவசமாய் ஜெயிக்கலாம். அதுவும் இந்த சமுதாயம் தப்பாகப் பேசக்கூடாது என்ற எண்ணத்தில்தான் குடும்பம் நடத்துவார்கள். மற்றபடி அதுவும் உண்மையான காதலாய் இருக்காது.

அப்படியென்றால் நல்ல காதலுக்கான தகுதி……? முதலில்அழகைப் பார்த்து வருவது நிச்சயமாக காதலாக இருக்கமுடியாது. ஒருவருடைய அன்பைப் புரிந்துகொண்டு வருவதுதான் காதல். இரண்டாவதுஇரண்டு பேருக்குமே நல்ல குடும்பப் பின்னனி இருக்கவேண்டும். மூன்றாவதுநல்ல வேலை சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். நான்காவதுடாக்டராக உள்ளவர் டாக்டரையும், என்ஜினியராக உள்ளவர் ஒரு என்ஜினியரையோ காதலித்தால்தான் அது வெற்றியடையும். அதாவது தொழில் ரீதியான புரிதல் இருக்கும். இதே போல ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படைகள் இருந்தால்தான் காதலில் பிரச்னை வராது. காதலும் உண்மையானதாக இருக்கும்.காதலன் அழைக்கிறான் என்று காற்று வாங்கக்கிளம்பும் ஜோடிகளில், ஒவ்வொரு பெண்ணுக்கும், காதலனுக்கு அருகில் அவள் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தாலும், அப்பா, அம்மாவை ஏமாற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறோம் என்கிற மன உறுத்தல் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். உண்மையாக காதலிக்கிறார்கள் என்றால், இப்படி யாரும் ஊர் சுற்றமாட்டார்கள். நான் இந்தப் பையனை அல்லது பெண்ணை விரும்புகிறேன் என்று முதலில் தங்களது பெற்றோர்களிடம் சொல்லி அந்தக் காதல் கைகூட எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.

அன்பைப் பறிமாறிக்கொள்கிற தினம்தான் காதலர்தினம் என்றால் வருடம் முழுவதும் அன்பைப் பறிமாறிக்கொள்ளலாமேஏன் அன்று மட்டும், யாரையோ சந்தோஷப்படுத்த வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும்? அதனால் அப்படியொரு தினமே தேவையில்லை.


பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணத்திற்குப் பிறகு துணையைக் காதலிப்பதுதான் எல்லா வகையிலும் சிறந்தது. பெரிய அளவில் பிரச்னை வந்தால்கூட இரு தரப்பு பெற்றோரும் ஓடி வந்து உதவுவார்கள். அறிவுறை சொல்வார்கள். காதல் திருமணத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை.


சில நேரங்களில் சில பெண்கள் அந்தஸ்து, படிப்பு, வேலை இவை எல்லாவற்றையும் விட கீழான நிலையில் உள்ளவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இது போன்ற சூழலில் ஒரு பெண் காதலிப்பது, புதைகுழி என்று தெரிந்தும் அதற்குள் அவள் விழுகிறாள் என்றுதான் அர்த்தம். ஒருசிலர் வேண்டுமானால் சமூகத்தில் போராடி முன்னுக்கு வரலாம். ஆனால் பெரும்பாலும் தாழ்வுமனப்பான்மையினால் உறவுப்பிணைப்பே பெரும் சிக்கலாகி விவாகரத்தில் முடிந்துவிடுகிறது.

காதலிப்பதாக் கூறி ஒருவன் தன்னை வருத்திக்கொண்டால், பெண்கள் உடனே காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். பெண்களின் இந்த இரக்க குணமே அவர்களை படுகுழியில் தள்ளுகிறது. அதனால்தான் இவர்கள் எல்லா விஷயங்களிலும் எளிதில் ஏமாந்து போய்விடுகிறார்கள். தாங்கள் சோகமாக இருக்கும்போது யாராவது ஆறுதல் சொன்னால் கூட வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பிவிடுகிறார்கள்.முன்பெல்லாம் காதலில் தோற்றுப்போனால் ஆண்கள் தாடி வளர்த்தார்கள். மதுவுக்கு அடிமையானார்கள். பெண்கள் தற்கொலை வரைக்கும் போனார்கள். இப்போது அப்படி எல்லாம் கிடையாது. இந்தப்பெண் கிடைக்கவில்லை என்றால் அடுத்தப் பெண்ணைப் பார்க்கப் போய்விடுகிறான் பையன். பெண்ணும் அப்படித்தான்! காதலில் தோற்று தற்கொலை வரை போவது மிக மிக அரிது. இதுதான் இன்றைய உண்மை நிலவரம்! இதுவே பெரிய மாற்றம்தானே


காதலில் விபத்தாய் தடுக்கி விழுந்து ஆலமரமாய் எழுந்து நின்றவர்களும் இருக்கிறார்கள்; அந்த விபத்திலே கீழே விழுந்து, வாழ்க்கை முகவரியைத் தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

No comments:

Post a Comment