கலைந்து போ! கரைந்து போ! காணாமல் போ!
இதுதான் காதலுக்கும் கலைக்கும்
பொதுவான தேசியகீதம்
ஏன்? நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
யாரிடமாவது சொல்லத்துடிக்கிற -ஆனால்
சொல்ல முடியாத சக உளைச்சல்.
என் கால்கள் ஒரு கால் நூற்றாண்டு
சகாராவைக் கடந்து வந்தனவே!
இந்த நிழலில் ஒதுங்கத்தானா?
இத்தனை காலம் என் வாலிப நதி
நுரைக்க நுரைக்க ஓடி வந்ததே!
இந்த கடல் மடியில் வந்து கலக்கத்தானா?
யாரும் இப்படி என் மனசை ஆணியடித்து
மாட்டியதில்லையே!
இதற்கு முன்னால் என் புலன்கள்
இப்படி பூப்பூத்ததில்லையே?!
அவள் புன்னகையை எடுத்து பூசிக்கொண்டேன்;
என் காயங்கள் ஆறுகின்றன.
அவள் பார்வை பற்றிப் பரவியதில்
என் சோகங்கள் எரிந்து விட்டன.
நேற்று என் நெற்றி தொட்டாள்
அந்த சித்தர விரல்களின் சீதளத்தில்
அத்தனை உணர்வுகளும்
ஆவியாகிவிட்டன!
அவள் தொட்டால் உச்சிச் சூரியனே உறைந்து விடுமே!
உடற்சூடு எம்மாத்திரம்?!
- வைரமுத்து.
வாழ்க்கையில் உற்சாகம் வேண்டுமா?
தனியாக ஒரு அறைக்குள் உங்களை அடைத்துக்கொண்டு, இன்று நான் உற்சாகமாக இருக்கப் போகிறேன்; உற்சாகமாக வேலை செய்யப்போகிறேன். என் சம்பளம் ஜீரணமாகும் வண்ணம் புன்முறுவலுடன் உற்சாகமாக இன்று முழுக்கப் பணியாற்றப் போகிறேன்,’ என்று உரக்கச் சப்தம் போட்டுச் சொல்லிவிட்டப் புறப்படுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை!
வைரமுத்து கவிதைகள் எல்லாமே வைரங்களாய் ஜொலிக்கிறது.
ReplyDeleteவருகைக்கு நன்றி கவிப்ரியன்.
ReplyDeleteவைரமுத்து கவிதை....
ReplyDeleteThank you very much. முதற்தரம் இதை வாசித்தேன் எல்லாக் கவிதையுமா நாம் வாசிக்கிறோம்!.
நன்றி. .நன்றி...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவைக்கவி அவர்களே! உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் வலைத்தளத்திற்கும் வருகை தந்திருக்கிறேன்.இனியும் வருகிறேன்.
ReplyDelete