அவசரமாய் ரோஜாவை நீட்டி ‘ஐ லவ் யூ’ என்றேன்.
அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை!
நீட்டிய ரோஜாவை வாங்கிக் கொண்டு
நிதானமாய் ‘நன்றி’ என்றாள்.
அதிர்ச்சி அவனுக்குத்தான்!
நீ... நீயும்தானே... தப்புத்தப்பாய் தந்தியடித்தேன்.
அவள் சிரித்தாள்... நீளமாய்ச் சிரித்தாள்!
என்னைப் பார்த்து ‘ஐ லவ்’ சொன்ன
ஆட்களின் வரிசையில்
நீங்கள் கடைசியில் நிறகிறீர்கள்!
ஏன் காதல் என்ற தத்துவத்தில் உனக்கு
நம்பிக்கை அல்லையா?
காதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம்
அதை உடல் சார்ந்ததாகவே உடர்கிறது.
ஆனால் உண்மையில் காதல் என்பது
பாச உணர்ச்சியும் பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி
ஜடை போட்டுக் கொள்கிற சம்பவம்!
பாச உணர்ச்சி மட்டுமே காதல் என்றால்
ஒரு பிராணி போதும்!
பாலுணர்ச்சி மட்டுமே காதல் என்றால்
ஒரு விலைமகள் போதும்!
ஆனால் இந்த இரண்டும்
எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோ
அந்தப் புள்ளிதான் காதல்!
இப்போது சொல்லுங்கள்,
நீங்கள் அந்தப் புள்ளியில் நிற்கின்றீர்களா?!
அன்பு!
அன்பு கண்கூடாக வெளிப்படும் சந்தர்ப்பமே பணி என்பது. அன்போடு செய்யும் பணியின் மூலம், கலப்பற்ற பெருமிதத்தை அடையும் பெருந்தன்மையான மனிதனாக உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
அன்பு!
அன்பு கண்கூடாக வெளிப்படும் சந்தர்ப்பமே பணி என்பது. அன்போடு செய்யும் பணியின் மூலம், கலப்பற்ற பெருமிதத்தை அடையும் பெருந்தன்மையான மனிதனாக உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
கவிதையாய் மட்டுமல்ல ,,,
ReplyDeleteஉணர்சிபுர்வமாய் உள்ளது....
எழுதி கொண்டாடுங்கள்
வாழ்த்துவது
அல்ட்ரா விக்டர்
கவிதையாய் மட்டுமல்ல ,,,
ReplyDeleteஉணர்சிபுர்வமாய் உள்ளது....
எழுதி கொண்டாடுங்கள்
வாழ்த்துவது
அல்ட்ரா விக்டர்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அல்ட்ரா விக்டர் அவர்களே.
ReplyDelete