கட்டிக்கொண்டு
வருவார்கள்
அசலூர் விவசாயிகள்...
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
விற்க.
‘நெல்லு-சோளம்
கம்பு-வரகு
ஒரு வல்லத்துக்கு
ஒரு தூக்கு...
கெழங்கு கெழங்கோய்...’
தெருத்தெருவாய்
கூவிப்போவான்
ஏவாரி.
ஏதேனுமொரு
தானியத்தோடு
கிழங்கு வச்டியை
மொய்க்கும்
புட்டிகள்.
கடந்து செல்வோரின்
கிழங்கு மெல்லும் ஓசை
மனசைப் பிசைய...
வைத்து
காக்காக்கடி கடித்து
கூட்டாளி கொடுத்த
கிழங்கின் ருசி
இச்சையை மடங்காக்க...
அம்மாவைப் பார்க்கிறேன்.
‘அதுலாம்
வவுத்துக்கு ஆவாதுப்பா...’
என்பாள். ஆனாலும்
‘இந்தாடியம்மா
ஒம்புள்ளகிட்ட குடுன்னு
ஒன்றிரண்டு
கிடைக்குமென்பதற்காகவே
ராத்திரியில்
சிநேகிதி வீட்டில்
நெடுநேரம்
பேசிக்கொண்டிருக்கும்
அம்மா.
அப்படியும்
கிடைக்காதபோது
நான்
உறங்கினபிறகுதான்
வீட்டுக்கு வரும்.
- ---- கார்முகில்.
எது வளர்ச்சி?
எனக்கு அனுபவம் முக்கியம். புதுப்புது அனுபவங்கள் முக்கியம். உலகில் எந்த இயக்கமும், எந்த பாலிசியும், எந்த தத்துவமும் முடிவான முடிவல்ல. வாழ்க்கை நடந்து கொண்டே இருப்பது. வளர்ந்து கொண்டே இருப்பது. எப்போதும் வளரமுடியும். வளர்ச்சி எது. மாறுதலே வளர்ச்சி. மாறாதது வளராது. எது மாறும். உயிருள்ளது அனைத்தும் மாறும்.
-பாலகுமாரன்.
-பாலகுமாரன்.
அருமையான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே
ReplyDelete