நான் என்னை ஒரு வங்கிப் பெட்டகத்தைப் போல எப்போதும் மூடி வைத்திருக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் (என்னைச் சுற்றி நடக்கிற) எதிர்வினை ஆற்ற நினைக்கிறேன். – ஹெமிங்வே (பத்திரிகையாளர்) அட நானுந்தாங்க!
7 January 2010
பொங்கலோ பொங்கல்
கிணற்று நீரில் குதித்து
விளையாட
வரப்பில் ஓடி வழுக்கிவிழ
மார்கழிக் குளிரில் நெருப்பு
மூட்டிக் குளிர்காய
‘ஏய்யா கண்ணு துரும்பா
இளைச்சுட்ட...?
விசாரிப்புக்கேனும்
இந்தப் பொங்கலுக்கு
சொந்த ஊருக்குச் சென்று
வரவேண்டும்!
வெள்ளையடிக்க
தென்னைமட்டை வெட்டப்போவோம்
வாழைக்கன்னு வெட்ட
கழனிக்காட்டுக்குப் போவோம்
மாவிலைப் பறிக்கிற சாக்கில்
மரக்குரங்கு விளையாடுவோம்
மாடு குளிப்பாட்ட
மந்தைவெளிக்குப் போவோம்
மஞ்சள் செடி பிடுங்க
மாமாவின் தோட்டம் போவோம்
கரும்புக்கிடைக்கு கால் கடுக்க
நடப்போம்!
பொங்கல் வைக்கும் பானைக்காக
அக்காவோடு அரப்பாக்கம் போவோம்!
ம்...
எல்லாம் தனித்தனிக் கதைகள்!
எதுவுமில்லாத இந்தத்
தலைமுறையோ
கதையும் தெரியாமல்
கலாச்சாரமும் புரியாமல்
எப்படிச்சொல்லும்
‘ஹாப்பி பொங்கல்’!
Labels:
என் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment