ஒரு மனிதன் சாப்பாடு இல்லாமல் ஒரு வாரம் பத்து நாள் கூட இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாள் கூட இருக்கமுடியாது! உண்ணா நோன்பு இருப்பவர்கள் 30-40 நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் இடையிடையே தண்ணீர், எலுமிச்சை சாறு குடிப்பார்கள். ஏனென்றால் தண்ணீர் குடிக்காமல் மூன்று நாளைக்கு மேல் இருக்க இயலாது! நமது உடலே தண்ணீரால் ஆனதுதான். உடல் எடையில் 80% தண்ணீர்தான்.
இரத்த ஓட்டத்திற்கு தண்ணீர் வேண்டும். இரத்தம் ஓடாவிட்டால், இதயம் நின்றுவிடும். தோல் சுவாசிக்கவும் (ஈரம்) தண்ணீர் வேண்டும். தண்ணீர் இல்லையென்றால் தோலில் வெடிப்பு ஏற்படும். நாம் சாப்பிடுவது செரிக்கவும் தண்ணீர் வேண்டும்.
இப்படியாக உடல் இயக்கத்துக்கு நாள்தோறும் குறைந்தது 6-7 தம்ளர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தான் நாள்தோறும் குறைந்தது ஏழு தம்ளர் தண்ணீர் குடியுங்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
தண்ணீர் பஞ்சம்
ஆனால் அந்த அளவுக்கு நமக்கு தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை! உலக நாடுகளில் ஒவ்வொரு ஆளுக்கும் எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்று ஐ.நா சபை 150 நாடுகளில் ஒரு கணக்கு எடுத்தது. இதில் இந்தியாவுக்கு 133 வது இடம்! இந்தியாவில் அவ்வளவு தண்ணீர் பஞ்சம்! 1955 ல் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5,277 கன மீட்டர் தண்ணீர் கிடைத்தது. இது 2000 ல் 1970 கன மீட்டராக குறைந்தது. 2003 ல் 1880 கன மீட்டர் மட்டுமே கிடைத்தது. இப்போதைய புள்ளி விபரம் தெரியவில்லை.
வரவர உலகில் வெயில் அதிகமாகிறது. துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளெல்லாம் கூட இதனால் மிக அதிக அளவில் உருகிக்கொண்டிருக்கிறது. மழை குறைகிறது. மக்கள் தொகை பெருகுகிறது. இதனால் தண்ணீர் கிடைபது சுருங்கிக்கொண்டே வருகிறது. அடுத்த பத்தாண்டில் நம் நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
குடிதண்ணீர்
அந்தக் கணக்கு-குடிக்க, குளிக்க, துவைக்க, வீடு கழுவ, காடு கழனிகளுக்கு நீர்ப்பாய்ச்ச, ஆடுமாடுகள் குளிப்பாட்ட என்று எல்லாப் பயன்பாட்டுக்கும் சேர்த்தது. மனிதர்கள் குடிக்க மட்டும் பயன்படுத்தும் தண்ணீர் எப்படி இருக்கிறது?
குடிக்க தண்ணீர் கிடையாது. ஆறு, குளம், கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டியிருக்கிறது. அந்த தண்ணீர் சுத்தமாக இருப்பதில்லை. உப்பு கரிக்கும்! குடி தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று 122 நாடுகளில் உலகநாடுகள் சபை கணக்கெடுத்தது. இதில் இந்தியாவுக்கு கடைசி இடம் 119 வது இடத்தில்! இந்திய மக்கள் அவ்வளவு மோசமான தண்ணீரைக் குடிக்கிறார்கள்! இப்போது நகர்ப்புற வாசிகள் ‘மினரல் வாட்டர்’ என்று தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்குடிக்கும் அவல நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த்த் தண்ணீரும் 50% தான் சுத்தமாக இருக்கிறது என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்!
காய்ச்சிக்குடியுங்கள்
பெரும்பாலான நோய்கள் தண்ணீர் வழியேதான் மனிதர்களுக்குப் பரவுகின்றன. வாந்தி, பேதி, டைபாயிடு, மஞ்சள் காமாலை போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் தண்ணீர் வழியே பரவக்கூடியவை. அசுத்தமான நீரைக் குடிப்பவர்களுக்கு இந்த நோய்கள் வரக்கூடும். நோய்க்கிருமிகள் தண்ணீரில் கலந்திருப்பதே இதற்குக் காரணம். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடித்தால்தான் இந்த நோய்களிலிருந்து தப்ப முடியும். நீரைக்கொதிக்க வைத்து வடிகட்டி, ஆற வைத்து அதன் பின் குடித்தால் இந்த பாதிப்பிலிருந்து மீளலாம்.
தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதனுடன் ஒரு பிடி சீரகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்த சீரகத் தண்ணீர் பல நோய்களுக்கு மிகவும் நல்லது, மேலும் உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெருக்கும்.
சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம். விபரம் வேண்டுமா? இந்த வலைப்பதிவைப் போய்ப்பாருங்கள்.
ஆங்கிலத்தில் படிக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இதில் நீங்கள் யார்?
முட்டாள் மன்னிக்கவும் மாட்டான், மறக்கவும் மாட்டான். சராசரி புத்தி கொண்டவன் மன்னிப்பான் – மறப்பான்! அதிபுத்திசாலி மன்னிப்பான், ஆனால் மறக்கமாட்டான்.
சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம். விபரம் வேண்டுமா? இந்த வலைப்பதிவைப் போய்ப்பாருங்கள்.
ஆங்கிலத்தில் படிக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இதில் நீங்கள் யார்?
முட்டாள் மன்னிக்கவும் மாட்டான், மறக்கவும் மாட்டான். சராசரி புத்தி கொண்டவன் மன்னிப்பான் – மறப்பான்! அதிபுத்திசாலி மன்னிப்பான், ஆனால் மறக்கமாட்டான்.
தண்ணீரை காய்ச்சி குடிக்கவே மாட்டேங்கிறாங்க நிறைய பேர் அதனால் நோய் பரவலாம் என்று தெரிந்த போதும்! சீரகத் தண்ணீர் குடிப்பது உண்மையில் நல்லதுதான்! பதிவு மிக நன்றாக உள்ளது!
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே! நிறைய விஷயங்கள் ஏட்டுச்சுரைக்காயாக நின்றுவிடுவது வேதனையாக உள்ளது.
ReplyDeleteபுகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை . உண்மையான இன்றைய நிலையை அழகாய் காட்டி இருக்கிறது உங்களின் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
ReplyDeleteஎன்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நண்பரே! வலைப்பக்கம் ஆரம்பித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை உருப்படியாய் எதுவும் செய்யவில்லை. உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியால் இனிதான் மெருகேற்ற வேண்டும். அவ்வப்போது எனக்கு பதிவுகள், பக்கங்களை மேம்படுத்துவது தொடர்பாக எனக்கு உதவுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநட்புடன்,