வாய் ருசி மறந்தாய். உற்ற உறவுகளில்...
வந்த என்னை உன் வயிற்றில்
நோயுடன் சுமந்திருந்தாய்.
சாய்ந்திருந்தே சாப்பிட்டாய்.
சட்டென ஒரு வாந்தி.
சடுதியில் துன்பங்கள்
பல உணர்ந்தாய்.
ஆனாலும்.......
பெற்ற அப்போதில்
என்னைப்
பேரன்பாய் முத்தமிட்டாய்.
உற்ற உறவுகளில் உத்தமமே
என் தாயே.....
விலையற்ற உன் அன்பென்
சிற்றறிவுக்கெட்டவில்லை.
சிறகடிக்கும் என் பருவக் கனவோடு
உன்னோடு பலதடவை
முட்டி மோதினேன்.
ஆனாலும்
அது பற்றி நினையாய் நீ.
பெற்றபிள்ளை நலம் வாழ வாழ்த்துகிற
உற்றவளே......
சுற்றம் உனக்கிணையா?
சூழ்ந்துவரும் நண்பர் உனக்கிணையா?
வெற்றியுறு காதல் இணைபெறுமா?
அத்தனையும்
மறுதலிப்பேன்.
என் தாயே.....உயிரைப்
பிச்சையிட்டாய் எனக்கு!
எளிய மகன்
விட்டபிழை பொறுத்தருள்வாய்.
-ஆதித்தன்
விரிசல் ஏன்?
திருட்டுத்தனம் காதலாகாது. பொய்மை அன்பாய் மலராது. உணர்வுரீதியாக, புத்திரீதியாக ஒன்றுபடினும். கபடநாடகம் போட சின்ன விரிசல் கூட கவிழ்த்துவிடும்.
அன்னையைப் பற்றி யெதை எழுதினாலும் அழகுதான், அதிலும் உங்கள் நடை மிக அழகு
ReplyDeleteரசித்தேன்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜகோபாலன் அவர்களே!
ReplyDelete