29 December 2011

பசியோடு இருங்கள்; முட்டாளாக இருங்கள்; ஸ்டீவ்ஜாப்ஸ்


'வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புள்ளி. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் இந்தப் புள்ளிகளுக்குள் இருக்கும் தொடர்பு புரியும். இந்தப் புள்ளிகள் எப்படியாவது சந்திக்கும் என்று நாம் நம்ப வேண்டும். இதற்குக் காரணம் உள்ளுணர்வு, விதி, வாழ்க்கை, கர்மா என்று பல காரணங்களைச் சொல்லலாம். நான் இதை நம்புகிறேன்'.

இந்த வாழ்க்கைத் தத்துவத்தால் ஸ்டீவ் இறந்த காலம் பற்றி அழவில்லை; வருங்காலம் பற்றி கவலைப்படவும் இல்லை.

'உங்கள் வாழ்க்கை குறுகியது. இன்னொருவருக்காக வாழ்ந்து அதை வீண்டிக்காதீர்கள். நீங்கள் நிஜமாகவே என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மனதுக்கும், உள்ளுணர்வுக்கும் தெரியும். அவற்றைப் பின்பற்றுங்கள்' என்று சொன்ன ஸ்டீவ், ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்ந்தார். மரணம் வருவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்னால் வரை, அவர் உழைப்பு ஓயவில்லை.

திறமை, திறமை, திறமை!

வெற்றியின் மந்திரச்சாவி திறமை மட்டுமே என்பதை ஸ்டீவின் அசைக்க முடியாத நம்பிக்கை. நம்பர் 1 திறமைசாலிகள் மட்டுமே அவரோடு வேலை செய்ய முடியும். இரண்டாம் தர ஆட்களை வேலைக்கு எடுத்தால், அவர்கள் மூன்றாம் தர ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நடைமுறை கம்பெனிகளை எழுந்திருக்கவே முடியாத படுகுழிக்குள் தள்ளிவிடும் என்பது ஸ்டீவின் கொள்கை.



பசியோடு இருங்கள்; முட்டாளாக இருங்கள்!

அமெரிக்க ஸடான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 2005 ல் ஸ்டீவ் பேசினார். தன் வாழ்க்கையின் சித்தாந்தம் என்னவென்று இளைய தலைமுறைக்குச் சொன்னார். அது, STAY FOOLISH, STAY HUNGRY.


அப்படியென்றால்....? உங்கள் வெற்றிகளில் எப்போதுமே திருப்திப்படாதீர்கள். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற பசி உங்கள் அடிவயிற்றில் வெறியாக எறியட்டும். சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருக்கும் மரபுகளை உடையுங்கள். செம்மறியாட்டுக் கூட்டமாக எல்லோரும் போகும் பாதையில் போகாமல் புதிய பாதையைப் போடுங்கள்.

மரபுகளை மீறும்போது, உலகம் உங்களைக் கேலிசெய்யும்; முட்டாள் என்று செல்லும். நீங்கள் அடியெடுத்து வைக்கும் பாதை சரியானதென்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், உங்கள் பயணத்தை தயக்கமே இல்லாமல் தொடருங்கள். அந்த நான்கு பேர் கணிப்பில் 'முட்டாள்களாகவே இருங்கள்'.

இந்தப் பசியும் புதுமைத்தேடலும் இருந்தால்தான், சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறி விண்ணைத் தொட்டார் ஸ்டீவ்.

3 comments:

  1. புது வருடத்தில் சிந்தித்து சிறப்பாக வாழ உதவுகுற மாதிரி நல்ல பதிவு வழங்கிட்டீங்க..
    நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி குமரன்! தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக நண்பரே..இவ்வளவு நாட்களாக தங்கள் பதிவுகளை பார்க்கவில்லை என்றே நினைக்கிறென்..அதற்கு முதலில் ஒரு மன்னிப்பு.இனிமேல் வருகிறேன்.
    நன்றி,

    ReplyDelete