உலகத்திலேயே மிகப்பெரிய மரங்களில் ஒன்றான இம்மரத்தின் அடிப்பகுதி பாட்டில் வடிவத்தில் உள்ளது. இது இருக்கும் இடம் கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தில் ‘சாவனூர்’ என்ற ஊரில் அமைந்துள்ளது. கன்னடத்தில் ‘தொட்ட உன்ஷே மரம்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் புளியமரத்திற்கும் இதற்கும், கிளை, இலை, காய்களில் நிறைய வித்தியாசமிருக்கிறது.
அடிமரத்தின் சுற்றளவுதான் பெரியதாக இருக்கிறதே தவிர உயரம் அதிகமில்லை.மூன்று மரங்கள் அருகருகே அமைந்திருக்கிறது.
இந்த மரம் பாம்பூகேஷியா என்ற குடும்ப வகையைச்சேர்ந்தது.
அடிப்படையில் இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாக சொல்கிறார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தார் என்ற கதையும்உண்டு.
இந்தியாவில் இந்த மாதிரி தாவரங்கள் மிகக்குறைவு. இந்த மரத்தின் காய் மருத்துவ குணம் வாய்ந்தது. இதனுடைய நிழலில் ஏதாவது உணவுப்பொருள் இட்டாலும் அது கெட்டுப் போவதில்லையாம்.
பலவருடங்களாக இது இருக்கிறது என்று சொல்கிறார்களேயொழிய இதன் வயது பற்றிய தகவல்களோ, கின்னஸ் உலக சாதனைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்கிற தகவலோ இல்லை.
மரம் 1: அடிமரத்தின் சுற்றளவு (Girth) - 15.70 மீட்டர்
மரம் 2: அடிமரத்தின் சுற்றளவு(Girth) - 12.92 மீட்டர்
உயரம் (Ground height) - 16. 40 மீட்டர்
மரம் 3: அடிமரத்தின் சுற்றளவு (Girth) - 12.63 மீட்டர்
உயரம் (Ground height) - 17. 50 மீட்டர்
மிக உபயோகமான முக்கிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅரிய தகவலை இடுகையாக்கியமைக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteநன்றி வின்சென்ட், நன்றி நிகழ்காலம்!
ReplyDeleteநல்ல தகவல் எம்.ஞானசேகரன்
ReplyDeleteபாம்பூகேஷியா = பாம் + பூ + கே + ஏசியா =
இந்த மரத்தின் பூ மற்றும் மரபட்டை உள்ள ஒரு வகை வேதி பொருள் வெடிபொருள் செய்ய உதவும் இதன் பக்க விளைவுகள் அதி பயங்கரமானவை. இதன் சிறப்பு அம்சம்
வெடிக்கும் போது பூகை ஊதா நிறமாக இருக்கும்.
இந்த வெடியை தயாரிப்பதில் மங்கோலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் வல்லவர்கள் எனவே இதை மற்ற நாட்டினர் பாம் கே ஏசியா என்று நடுக்கத்துடன் கூறுவர்கள்.
இதன் மோசமான விளைவால் காலபோக்கில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டது.
- ஆதார ஓலை சுவடி "உலகை அழிக்கும் சூஸ்த்திரம்" (கன்னிமார நூலகத்தில் உள்ளது)
விஞ்ஞானி.வின்சென்ட் செல்வா
தாரபுரம்.