7 March 2010

தலைவராகும் மந்திரம்


v  பலரும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் சொந்தப் பிரச்னைகள், அலுவலகத்தில் உள்ள பிரச்னைகள், குறிக்கோள் இல்லாமல் செயல்படுதல் ஆகிய இந்த மூன்று பிரச்னைகளே! இவை ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது. வீட்டுப் பிரச்னைகளை அலுவலகத்துக்கு எடுத்துவரக்கூடாது.


v  ஆர்வம் இருந்தால் எந்த நிறுவனத்தில் எந்தப்பதவியில் இருந்தாலும் முன்னேறலாம். அவ்வப்போது நாம் போகிற திசை, நம்முடைய இலக்கு நோக்கிச் செல்கிறோமா என்பதை கவனித்துச் செயல்படவேண்டும். இல்லையென்றால் ஆயிரத்தில் ஒருவராகவோ அல்லது லட்சத்தில் ஒருவராகவோ இருக்க வேண்டியதுதான்.

v  முதல் ஆறு மாதத்தில் நிறுவனம் நம்மிடம் எதிர்பார்த்ததை நாம் எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை மறு மதிப்பீடு செய்துபாருங்கள். குறைவாகத்தான் செயல்பட்டு இருக்கிறோம் என்றால், நம்மிடம் எங்கு பிரச்னை இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அதிலிருந்து விடுபட்டு, அடுத்த ஆறு மாதத்தில் முழுத்திறனையும் காட்டி உயர் பதவிக்கு வழியை உருவாக்கலாம்.


v  உங்கள் பணியில் முழுத்திறனையும் காட்டுகிறீர்கள். ஆனால் எதிர்பார்த்த காலங்களில் உங்களுக்கு வளர்ச்சி இல்லை. அடுத்த நிலைக்குச் செல்ல முடியவில்லையென்றால், அந்த நிறுவனத்தில் தொடர்ந்து இருப்பது நல்லது அல்ல. அதே மாதிரி ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு அடிக்கடி மாறுவதும் நல்லதல்ல.

v  ஒரு துறையில் சிறந்த நிபுணராக முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் சிறப்பு, தனித்தன்மை உயர் பதவியைப் பெற்றுத் தரும். அந்த்த்துறையில் பல்வேறு பணிகளைக் கற்றுக்கொண்டு, அதில் புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பணிகளை எளிமைப்படுத்தலாம்.

நன்றி; நாணயம் விகடன்.



No comments:

Post a Comment