9 November 2011

தேர்தல் சீர்திருத்தங்கள்


‘தினமணியின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த தலையங்கத்திற்கு நான் எழுதிய வாசகர் கடிதம். நாள்;    டிசம்பர் 18, 1988.


 நாட்டில் படித்தவர்களின் சதம் 36% ஆக இருக்கும்போது, எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் சதவீதம்தானே அதிகம்! எனவேதான் கல்வியறிவு அற்றவர்களைக் கவர்ச்சியால் மயக்கி, ஓட்டு வாங்கத் திட்டம் வகுக்கின்றனர் அரசியல்வாதிகள். இதில் ராஜீவும் ஒன்றுதான்; வி.பி.சிங்கும் ஒன்றுதான்.

பதினெட்டு வயது என்றால் பள்ளியிலும் அரசிநல் நுழைந்துவிடும் என்பதை கவனத்தில் கோள்ளவேண்டும். தேர்தல் தண்டல் வாங்காத கட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். இதில் அரசின் சார்பிலேயே தேர்தல் நிதியைத் துவக்கினால், ஆளுங்கட்சிக்குத்தானே அரிய வாய்ப்பு. ஆக மொத்தத்தில் ‘அரசியல் ஆதாயம் ஒன்றுதான் நோக்கம் என்ற வரிகள் நூற்றுக்கு நூறு சரியே!


அதே தினத்தில் எனது நண்பர் குரிசிலாப்பட்டு P.சண்முகம் என்பவரும் தனது கருத்தை எழுதியிருந்தார். அதுவும் உங்கள் பார்வைக்கு....

18 வயது வாக்குரிமை சரியில்லாத்தும், அவசியமில்லாததும் ஆகும். ஒருவரே இருமுறைக்கு மேல் பதவிக்கு வரக்கூடாது என்ற கருத்து மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தனிநபர் வழிபாடு மூலமாக அரசியல் நடத்தும் தலைவர்களுக்கும், அவர்களுக்குக் கீழ் பரவலாகக் குறுநில மன்னர்கள் போன்றவர்களும் உள்ளதால் இதைச் சட்டமாக்குவது என்பது பகற்கனவே!

வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், கள்ள ஓட்டுகம் அதே விகிதத்தில் கூடுதலாகும் எனபதும் உண்மையே. கள்ள ஓட்டு கிராமப் புரங்களில் சர்வகட்சி வாக்குச்சாவடி முகவர்களின் (பூத் ஏஜன்ட்) கவனிப்பு காரணமாக அதிகமாக வாய்ப்பு இல்லை.
ஆனால் நகர்ப்புறங்களில் அவ்வாறு இல்லை. எனவே நகர்ப்புறங்களுக்கு மட்டுமாவது ஃபோட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்குவது அவசியமாகும்.

அரசே தேர்தல் வரியை அறிமுகப்படுத்தி வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்கினாலும்கூட பணத்திற்காக ஓட்டுப்போடும் மக்களின் பலவீனம் மாறாவிட்டால், தேர்தலில் அதிக பணம் புழங்கியே தீரும்.

P.சண்முகம், குரிசிலாப்பட்டு


அன்புடன்,
எம்.ஞானசேகரன்.


தோற்றுப் போனவர்களின் துயர கீதம்!
மனிதனுக்கு ஆறடிதான் என்ற வேதாந்தம்
தோற்றுப் போனவர்களின் துயர கீதம் அல்லவா?
இந்த பூமியின் பரப்பு –
51 கோடியே 6 லட்சத்து 600 சதுர கிலோமீட்டர்
இதில் மனித நிலப்பரப்பு –
14 கோடியே 8 லட்சத்து 42,900 சதுர கிலோமீட்டர்
இதில் எட்டடி நிலத்திற்காவது
ஒவ்வொரு மனிதனுக்கும் உத்தரவாதமிருக்கிறதா?

No comments:

Post a Comment