9 October 2011

கம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்



சிகரம் தொட்ட ஸ்டீவ்:
"கம்ப்யூட்டர் இன்றி ஒரு அணுவும் அசையாது' என்றதற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு, முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆரம்ப கால கம்ப்யூட்டர் முதல் இக்கால "ஐபேட்' வரை உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள், இவரது மூளை "ஒர்க்ஷாப்'பில் உருவானவை. சிறு வயதில் சாப்பாடுக்கே வழியின்றி இருந்து, பிற்காலத்தில் சாதனையாளராக வளர்ந்தவர். அனைத்துக்கும் காரணம், இவரது கடின உழைப்புமட்டுமே. திறமையும் லட்சியமும் இருந்தால் எந்தசிகரத்தையும் எட்ட முடியும் என உலகுக்கு காட்டியவர்.ஒரு சாதாரண குடிமகனின் மறைவுக்கு, பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர் என்றால், இவரது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர், உயரத்தையும் தொட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம் தான்.


ஆசையான ஆப்பிள் தோட்டம்:
ஸ்டீவ் ஜாப்ஸ், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்த தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்கு கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூறும்விதமாக, தனது நிறுவனத்திற்கு "ஆப்பிள்' என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்த தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஜாப்ஸ்.


வாழ்க்கைப் படிகள்:
1955
பிப்.,24.ல் ஸ்டீவ், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் பிறந்தார்.
1970
படிப்பை முடித்த பிறகு இந்தியாவிற்கு வந்து புத்த மதத்தில் இணைந்தார்.
1974
மீண்டும் கலிபோர்னியாவிற்கு சென்று, பள்ளி நண்பர் ஸ்டீவ் உஜைன்க் என்பவருடன்இணைந்து "கோம்ப் பிரிவிவ் கிளப்' என்றகம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1976
இரண்டு பேரும் இணைந்து ஆப்பிள் 1 என்ற கம்ப்யூட்டரை உருவாக்கினர்.
1977
அதிக எடை கொண்ட ஆப்பிள் 2 என்றகம்ப்யூட்டரை உருவாக்கினர்.
1983
ஆண்டு, வணிக ரீதியாக ஆப்பிள் உருவாக்கப்படும் போது, கிராபிக்கல் யூசர் இன்டர்பேசுடன் (ஜி.யூ.ஐ.,) வடிமைக்கப்பட்டு, அதுதோல்வியடைந்தது.
*
மகிண்டோஷ் விற்பனைக்கு வந்தது.
1984
ஜனவரியில் மகிண்டோஷ் என்ற கம்ப்யூட்டர், வெற்றிகரமாக ஜி.யூ.ஐ., மற்றும் மவுசுடன்வடிவமைத்து வெளியிடப்பட்டது
1985
நன்பருடன் ஏற்பட்ட மன வருத்தத்தின்காரணமாக ஜாப்ஸ், அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
1986
ஜாப்ஸ், "நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தைஆரம்பித்தார்.
1989
ஆப்பிள் நிறுவனத்திற்கு, 188 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது
1997 "
ஐமேக்' என்ற புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பெரிய வெற்றி பெற்றது. 
2001
முதல் "ஐபேடு' விற்பனை செய்யப்பட்ட போது ஆப்பிள் நிறுவனம் "ஐடியூன்' சாப்ட்வேரை வெளியிட்டது.
2004
ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுஅறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
2009
ஜாப்ஸ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
2011
ஜன .,17 ஜாப்ஸ், உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
*
அக்.5 - புற்றுநோய், ஜாப்ஸ் உயிரைப் பறித்தது.


ஸ்டான்போர்டு பல்கலையை நெகிழ வைத்த சொற்பொழிவு:"ஒவ்வொரு நாளும் இறுதி நாள் தான்':
கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளரும் கூட. 2005ஆம் ஆண்டு ஜூன்12ம் தேதி கலிபோர்னியாமாகாணத்தில் உள்ளஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.


அந்த உரையின் தொகுப்பு:நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்றுகதைகளை உங்களுடன்பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். முதல் கதைபுள்ளிகளை இணைப்பது. நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. 

பத்து ஆண்டு உழைப்பின்பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி'(அச்சுக் கலை) கொண்டது. 2வது கதை : "லவ் அண்ட் லாஸ்' நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில்ஆப்பிள் நிறுவனத்தைதுவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என்நிறுவனத்திலிருந்து நான்வெளியேற்றப்பட்டேன். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. சில காலம் கழித்து ஆப்பிள்நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன்ஆப்பிளில் இணைந்தேன். 

மூன்றாவது கதை: இறப்புசிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்."உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான்எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். 

ஆனால், எனது வாழ்நாள்இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார் ஜாப்ஸ்


எது புதுமை:மற்ற மேதைகளை விட, வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில், தத்துவார்த்தமாக பார்ப்பவர் ஸ்டீவ் ஜாப். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய சில கருத்துகள்:
1.
புதுமை என்பது, ஆயிரம் பொருட்களை, புதிய முறையில் உற்றுநோக்கி சிந்திக்கும் போது உருவாகிறது.
2.
நீங்கள் பிறரிடம் எந்தவடிவத்தில் பொருள்வேண்டும் என்று கேட்கும் போதே, அவர்களின் பதிலே ஒரு புதிய பொருளைஉருவாக்க வழிவகுக்கும்.
3.
உலகத்திற்கு கேடு விளைவிக்காமல், புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு, பொருட்களை உருவாக்கி, மனிதர்களின் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்.



பலருக்கும் பாடமாக இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை :கஷ்டப்பட்ட காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை...:
 
மறைந்த ஆப்பிள் நிறுவன தலைவரின் முழுப் பெயர்,ஸ்டீவன் பால் ஜாப்ஸ். 1955ம் ஆண்டு பிப்.24ம் தேதி அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் அப்துல்பாட்டா ஜான் ஜன்டாலி, ஜோன் சிப்பெல். ஜாப்ஸ் பிறந்த போது அவரது பெற்றோருக்கு திருமணம் ஆகவில்லை. பிறந்த ஒரு வாரத்தில் பால் ஜாப்ஸ் மற்றும் கிளாரா ஜாப்ஸ் என்ற தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். 1972ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ஸ்டெட் மேல் நிலை பள்ளியில் படிப்பை முடித்தார். 

பின் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லாண்டு நகரில் உள்ள ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஏழ்மையான நிலையால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். நண்பர்கள் அறையில் தங்கியும், உணவிற்காக பழைய பாட்டில்கள், பேப்பர்கள் விற்றும், வார இறுதியில் "ஹரே கிருஷ்ணா' கோவிலில் இலவச உணவை பெற்றும் நாட்களை கழித்தார். 1991ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, லாரின் பவல் என்பவரை மணந்தார். இவர்களது திருமணம், ஒரு புத்த துறவியின் முன் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் தவிர, பே எரியாபிரென்னன் என்ற பெண்ணின் மூலமாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

நிறுவனம் தொடங்கியது எப்படி: ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினர்.இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ்,"ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். 1996ல் ஆப்பிள்நிறுவனம், ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில், அவருக்கு கணைய புற்றுநோய் என்றஅரிதான நோய் ஏற்பட்டது. வேலை செய்யாத "எஸ்கேப்': கம்ப்யூட்டரில் அந்த நேரத்தில் செய்துகொண்டு இருந்த பணியில் இருந்து தப்பிக்க "எஸ்கேப்' என்ற பட்டன் இருக்கிறது. ஆனால் உலகிற்கே கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ், புற்றுநோயிடம் இருந்து "எஸ்கேப்' ஆக முடியாமல் அக்.5ம் தேதி பலியானார்.

 
எட்டு அதிசயங்கள்:

ஸ்டீவ் ஜாப்சின் கண்டுபிடிப்புகள், உலக தொலைதொடர்பு உலகில் புரட்சியை ஏற்படுத்தின.

ஆப்பிள் 2:
"
ஆப்பிள் 2' கம்ப்யூட்டர்,"பெர்சனல் கம்ப்யூட்டர்களில்'முதன்மையானது.

"மெகின்டோஷ்' :
"
மெகின்டோஷ்' கம்ப்யூட்டர்,என்பது கிராபிக்கல் யூசர் இன்டர்பேஷ்' கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்குபடங்கள், கட்டங்கள், சின்னங்கள் மூலமாக கட்டளைகளை விளக்கலாம். உதாரணமாக, "மெனு',"பட்டன்' போன்றவற்றை கூறலாம்.

நெக்ஸ்ட்:
ஆப்பிளிலிருந்து வெளியேறிய பின் ஜாப்ஸ் உருவாக்கிய சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர், "நெக்ஸ்ட்'.

ஐமேக்:
இந்த கம்ப்யூட்டரின் சிறப்பம்சம், இதன் தோற்றம். கம்ப்யூட்டரின் மானிட்டர், பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த வடிவம் கம்ப்யூட்டர் உலகில் புத்துணர்ச்சியை அளித்தது. ஐபாட்இது முதல் டிஜிட்டல் மியூசிக்பிளேயர். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் எளிதாக இருந்ததே இதன் வெற்றிக்கு காரணம்.

ஐடியூன்ஸ்:
இந்த முறையில், டிஜிட்டல் ஒலியில் பாடல்களை "டவுண்லோடு' செய்யலாம். காப்புரிமை பிரச்னை கிடையாது. இணையதளங்கள்வாயிலாக, பாடல்கள் திருடப்பட்டது ஒழிக்கப்பட்டது.

ஐபோன்:
மொபைல் போன் உலகில் பெரும் புரட்சியை கொண்டு வந்தது ஐபோன்கள். எத்தனையோ மாடல்களில் மொபைல் போன்கள் வந்தாலும், இதன் விற்பனை இன்றும் சாதனை படைக்கிறது.

ஐபேடு:
சில நிறுவனங்கள் ஐபேடுக்குநிகராக "டேப்லட் கம்ப்யூட்டரை'வடிவமைத்து வருகின்றன. ஆனால், ஐபேடுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சிறிய கையடக்ககம்ப்யூட்டர் போன்று செயல்படுவதே, இதன் சிறப்பம்சம்.

நன்றி; தினமலர்.

3 comments:

  1. An
    APPLE
    a
    day
    did
    not
    keep
    doctor
    away
    from
    SteveJobs

    sahadevan

    ReplyDelete
  2. வந்து கருத்து கூறியமைக்கு நன்றி சகாதேவன் அவர்களே!

    ReplyDelete